‘சாமானியனை விட பெரிய தியாகம் எதுவும் நாம் செய்வதில்லை’ – வம்சிக்கு பதிலடி கொடுத்த தமிழ் பட இயக்குனர்.

0
374
vamsi
- Advertisement -

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் கடந்த 11 ஆம் ஆண்டு வெளியானது. அதிகாலை 11 மணிக்கு துணிவும் 4 மணிக்கும் வாரிசும் வெளியானது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு மற்றும் துணிவு வாரிசு படங்களுக்கு இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. அதாவது துணிவு தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தங்களுடைய படங்கள் இந்த பொங்கலின் “உண்மையான வெற்றியாளர்” என்று சோசியல் மீடியாக்களில் அறிவித்தனர். இது ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெயில் ஊற்றியது போலாகி இணயவாசிகளுக்கு இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

- Advertisement -

வெற்றி விழா :

இந்த நிலையில் தான் வாரிசு படம் 7 நாட்களில் 210 கோடியை வசூல் செய்துள்ளது என்று அதிகாரப்பூர்ப அறிவிப்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான் விஜய் நேற்று வாரிசு பட வெற்றிக்கு நட்சத்திர விடுதியில் வாரிசு படக்குழுவினருக்கு விருந்து வைத்தார். மேலும் இந்த விருந்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி படிப்பள்ளி, கணேஷ், ஷாம், சரத்குமார் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

விமர்சனங்கள் :

வெற்றி விழாவில் வாரிசு திரைப்படம் விமர்சன ரீதியாக அடிவாங்கியது. மேலும் வாரிசு திரைப்படத்தில் தொடக்கம் முதலே பல விமர்சங்கள் எழுந்தன. அதிலும் படம் சீரியலை போல இருக்கிறது என்றும், பல காலங்களாக நாம் பார்த்த புளித்துபோன அரைத்த மாவைத்தான் திரும்பவும் அறைகின்றனர் என்று விமர்சங்கள் எழுந்தன. இந்த நிலையில் இவர்கள் கூறும் விமர்சங்களை எல்லாம் கருத்தில் கொடுத்தான் விஜய்யின் வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி படிப்பள்ளி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

வம்சியின் சர்ச்சை பேச்சு :

இந்த நிலையில் தான் வாரிசு பட இயக்குனர் வம்சி படிப்பள்ளி பேட்டியில் கூறும்போது படம் எடுப்பது எவ்வளவு கடினம் தெரியுமா?. படக்குழுவு எவ்வளவு கஷ்டப்பட்டிருகின்றனர் தெரியுமா? பல பேர் தங்களின் கடின உழைப்பை இந்த படத்தில் போட்டுள்ளனர். படம் எடுப்பதற்கு இயக்குனர்களும் கடின உழைப்பை போட்டுள்ளனர். இப்படி பட்ட நிலையில் படம் சீரியலை போன்று இருக்கிறது என்கின்றனர். சீரியலை மட்டும் ஏன் குறைத்து பேசுகிறீர்கள், சீரியலும் படிப்பின் ஒரு பகுதிதான் என்று கூறினார்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

வம்சியின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நடிகர், இயக்குனர் என பலரும் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். நடிகர்கள் ஒன்றும் சும்மா வேலை செய்யவில்லை. நாங்களும் பணம் கொடுத்துதான் படத்தை பார்க்கிறோம் என்றும் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் தமிழ் பட இயக்குனர் சி எஸ் அமுதன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘பொதுமக்களை ஒப்பிடும் போது கோடிகளில் சம்பாதிக்கும் சொகுசான வேலையைத்தான் உச்ச நடிகர்கள் செய்து வருகிறார்கள்.

அமுதன் பதிவு :

சாமானியனை விட பெரிய தியாகம் எதுவும் நாம் செய்வதில்லை. நமது படைப்புக்கு பொறுப்பேற்க கூடிய இடத்தில் நாம் உள்ளோம்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர வம்சியை குறிப்பிட்டு அமுதன் இப்படி பதிவிட்டு இருக்கிறார் என்று நொடிஷன் கலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement