பக்காவான Remake படம்னா இதான் – விஜய் அட்லீ படத்தை பங்கமாக கலாய்த்த இயக்குனர். ரசிகர்களின் ரியாக்ஷன்.

0
389
vijay
- Advertisement -

மெர்சல் தான் சரியாக Remake செய்யப்பட்ட படம் என்று தமிழ் படம் இயக்குனர் கேலி செய்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே அட்லீ மிக பிரபலமாகி இருந்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் மீண்டும் விஜயை வைத்து மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். மீண்டும் விஜய்-அட்லீ கூட்டணி மாபெரும் ஹிட் கொடுத்து இருந்தது. பின் மூன்றாவது முறையாக விஜய்- அட்லீ கூட்டணியில் வெளிவந்து இருந்த படம் தான் பிகில். பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்ட கதை. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்து இருந்தது. பிகில் படம் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று 300 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

அட்லீ – ஷாருக்கான் கூட்டணி:

இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். மேலும், பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது என்றும்,

லயன் படம் பற்றிய தகவல்:

இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. அதோடு ‘லயன்’ என்ற தலைப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தை தொடர்ந்து அட்லி அவர்கள் மீண்டும் தளபதி விஜயை வைத்து படம் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்நிலையில் மெர்சல் தான் சரியாக Remake செய்யப்பட்ட படம் என்று தமிழ் படம் இயக்குனர் கேலி செய்த பதிவு வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அட்லீ படங்கள் குறித்து எழும் விமர்சனம்:

பொதுவாகவே அட்லியின் படங்கள் எல்லாம் தயாரிப்பாளரும், இயக்குனருமான மணிரத்தின திரைப்படங்களின் பிரதிபலிப்பு என்று சோசியல் மீடியாவில் விமசிக்கப்பட்டு வருகிறது. அட்லி இயக்கிய ராஜா ராணி படம் மணிரத்தினம் இயக்கிய மௌனராகம், தெறிபடம் மணிரத்தினம் எழுதி தயாரித்த சத்ரியன் படத்துடன் ஒப்பிடப்பட்டது. மூன்றாவது படமான மெர்சல் படம் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படம் ஒப்பிடப்பட்டது. கடைசியாக அட்லி இயக்கத்தில் வெளிவந்த பிகில்படம் Chak De India படத்துடன் ஒப்பிடப்பட்டு இருந்தது.

விஜய் படத்தை கலாய்த்த இயக்குனர்:

இப்படி அட்லி இயக்கிய அனைத்து படங்களும் பிற படங்களின் ரீமேக் என்று குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் பிரபல படங்களை ட்ரோல் செய்யும் இயக்குனர் சி எஸ் அமுதன் அவர்கள் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்தி இருந்தார். அப்போது அதில் ரசிகர் ஒருவர் உங்களை பொறுத்த வரைக்கும் ப்ராபரா தமிழில் ரீமேக் பண்ண படம் எது? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் மெர்சல் என்று விஜய்யின் படத்தை கூறி இருந்தார். இப்படி இவர் அளித்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மீம்ஸ்களை உருவாக்கி ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement