கோட் படம் குறித்து CSK ரசிகர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ பட படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
கோட் படம்:
மேலும், இந்தப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஒரு ஒரு பகுதி வைக்கப்பட்டிருக்கிறது. சேப்பாக்கத்தில் அனல் பறக்க நடந்த அந்த ஆக்ஷன் காட்சியை திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து எடுத்திருக்கிறார்கள். இந்த காட்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகனான சிஎஸ்கே சரவணனும் பங்கு பெற்றிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகன் சரவணன் பேட்டியில், இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை.
csk சரவணன் பேட்டி:
சின்ன வயதிலிருந்தே நான் விஜய் உடைய தீவிர ரசிகன். அவருடைய ஒரு படம் விடாமல் திரையரங்கில் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைத்தது ஒரு வரப்பிரசாதம். இதற்கு காரணம் சிஎஸ்கே, தோனியால் தான் சாத்தியப்பட்டது. எனக்கு ஏற்கனவே இயக்குனர் வெங்கட் பிரபுவை தெரியும். அவரும் தீவிரமான சிஎஸ்கே மற்றும் தோனி உடைய ரசிகர். சில வருடங்களுக்கு முன்பே அவரை நான் சந்தித்தபோது, உங்களை கண்டிப்பாக ஒரு படத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
படம் அனுபவம்:
சொன்னபடியே அவர் சில மாதங்களுக்கு முன்புதான் கோட் படத்துக்காக என்னை அழைத்தார். திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடந்தபோது மூன்று நாட்கள் என்னை அழைத்திருந்தார்கள். முக்கியமான நடிகர்களை எப்படி கவனித்துக் கொண்டாரோ அப்படித்தான் என்னையுமே அன்பாக பார்த்துக் கொண்டார். இவ்வளவு நாட்களாக திரையில் பார்த்த ரசித்த விஜய் சாரை நேரில் பார்த்தது ரொம்ப சந்தோஷம். அவர் என் தோள் மீது கை போட்டு நலம் விசாரித்தது எல்லாம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.
விஜய் குறித்து சொன்னது:
ட்ரைலரில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் விஜய் சார் பைக் ஓட்டுவது போல பார்த்திருப்பீர்கள். படப்பிடிப்பில் அந்த பைக்கில் தான் என்னை ஒரு ரைடு அழைத்துப் போனார். அது எல்லாம் எனக்கு கனவு மாதிரி இருந்தது. படப்பிடிப்பு முடித்து கிளம்பும் போது விஜய் சாருக்கு ஒரு சிஎஸ்கே ஜெர்சியை கிப்டாக கொடுத்தேன். விஜய் சாரும் சிஎஸ்கே மற்றும் தோனியின் உடைய தீவிர ரசிகர் தான். படத்தில் நான் ஒரு காட்சியில் தான் வருவேன். இருந்தாலுமே அது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று கூறியுள்ளார்.