தமிழ் நடிகை, எம் எல் ஏ. இருந்தால் என்ன? தனது தொகுதியில் தானே இறங்கி கிருமி நாசினியை தெளித்த நடிகை.

0
27420
Roja
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கொத்து கொத்தாக மக்கள் இறந்து உள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 தாண்டியது. இதுவரை இந்தியாவில் 339 பேர் கொரோனாவினால் அநியாயமாக இறந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது இந்த உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : உதவி செய்றத இதனால் தான் வெளியில் சொல்வது இல்லை. சந்தானத்தின் பேட்டியில் கூறியுள்ள அஜித்.

- Advertisement -

மேலும், கொடிய வைரசை எதிர்த்து மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, சுகாதார பணியாளர்கள் என பலரும் இரவு பகல் என்று பார்க்காமல் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர். மேலும், தூய்மை பணியாளர்கள் தெருக்கள், பொதுமக்கள் நடமாடும் இடங்கள் என ஒன்று விடாமல் அனைத்து இடங்களுக்கும் கிருமிநாசினிகள் தெளித்து வருகிறார்கள். அதோடு ஆள் இருக்கும் இடங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ரோஜா அவர்கள் ஊர் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லாம் கிருமி நாசினி தெளித்து உள்ளார். நகரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடமாலை பகுதியில் கொரோனா அறிகுறி ஒருவருக்கு இருப்பது தெரிய வந்து உள்ளது. இதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் ரோஜா அவர்கள் உடனடியாக அந்த நகராட்சியில் பகுதி முழுவதுக்கும் கிருமிநாசினி தெளிக்க உத்தரவு போட்டு உள்ளார். அந்த பணியில் ஈடுபட பல பணியாளர்கள் தயக்கம் காட்டினார்கள்.

இதையும் பாருங்க : வந்தேறி, கொல்டி என்று பல்வேறு கிண்டல்கள், நீங்கள் எந்த இனம் ? கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

-விளம்பரம்-

சட்டமன்ற உறுப்பினரான திருமதி ரோஜா அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கான உடை அணிந்து கிருமி நாசினி தெளித்தார். அதன் பிறகு ரோஜா உடன் சேர்ந்து பல பணியாளர்களும் ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளித்தார்கள். ரோஜா கிருமிநாசினி தெளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை ரோஜா. தமிழில் இவர் 1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதன் பின்னர் இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை,ரோஜா திருமணம் செய்துகொண்டார். ரோஜா தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement