உதவி செய்றத இதனால் தான் வெளியில் சொல்வது இல்லை. சந்தானத்தின் பேட்டியில் கூறியுள்ள அஜித்.

0
8506
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் தல அஜித்தும் ஒருவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவரை திரையுலகம் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அல்டிமேட் ஸ்டார், தல என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

-விளம்பரம்-

கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை ,விஸ்வாசம் ஆகிய படம் பட்டையை கிளப்பியது. பொதுவாகவே தல அஜித் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம், ப்ரமோஷன், ஆடியோ லாஞ்ச் என்று எதிலுமே அஜித் கலந்து கொள்ளவது இல்லை.

இதையும் பாருங்க : வந்தேறி, கொல்டி என்று பல்வேறு கிண்டல்கள், நீங்கள் எந்த இனம் ? கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

- Advertisement -

மேலும், தல அஜீத்தை வெளியில் பார்ப்பதே அபூர்வம் என்று சொல்லலாம். இந்த நிலையில் தல அஜித் பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் ரசிகர்கள் அஜித்திடம் பல சுவாரசியமான கேள்விகள் கேட்டார்கள். அதற்கும் அஜித் சலிக்காமல் பதில் சொன்னார். அதில் ரசிகை ஒருவர் நீங்கள் எவ்வளவு சமூக சேவைகள் செய்கிறீர்கள்? ஆனால், அதை வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டீர்கள்.

வீடியோவில் 2 : 22 நிமிடத்தில் பார்க்கவும்

வெளியே காண்பித்தால் உங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் கிடைக்கும். ஏன் நீங்கள் சொல்ல மாட்டுகிரீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அஜித் அவர்கள் கூறியது, நான் சினிமா துறையில் வந்து தான் சமூக சேவை செய்கிறேன் என்பது இல்லை. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது என்னால் முடிந்த சமூக சேவைகளை செய்து இருக்கிறேன். என்னை பொருத்தவரை சமூக சேவை செய்வது பப்ளிசிட்டிக்காக கிடையாது.

இதையும் பாருங்க : ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்மையில் துப்பாக்கியோடு துரத்தியுள்ள கிழவி. பூமிகாவின் பிளாஷ் பேக்.

-விளம்பரம்-

அதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி பிரபலம் ஆகுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நாம் செய்யும் சேவையை வெளியே சொல்லி மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்குவது பெயர் சமூக சேவை கிடையாது. நான் செய்வதை வெளியே காண்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பப்ளிசிட்டி கிடைப்பது எனக்கு பிடிக்காது. சேவை என்பது மனதார நாம் செய்வது. அதை நாம் பிரபலத்துக்கோ,பாராட்டுக்கோ செய்வதில்லை என்று கூறினார். இப்படி இவர் கூறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

மேலும், அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். தற்போது தல அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் வலிமை படத்தில் இணைந்து உள்ளார்கள். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர்.

Advertisement