விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் பாக்கியாவின் தோழியாக நடித்திருந்தவர் கம்பம் மீனா. இவர் வட்டார மொழி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் கம்பம் மீனா. சின்ன கிராமத்திலிருந்து வந்த இவர் இன்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

இவர் முதன் முதலாக தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் நடிக்க தொடங்கினார். இதுவரை கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் கம்பம் மீனா நடித்து உள்ளார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கஸ்தூரி அத்தாச்சியாக நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார். இது தவிர இவர் பிற சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொண்டு வருகிறார்.
கம்பம் மீனா குறித்த தகவல்:
இதை அடுத்து இவர் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில தினங்களாகவே கம்பம் மீனா தொடர்பான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, பொட்டிக் வைத்திருப்பவர்களிடம் கம்பம் மீனா நைசாக பேசி ஓசியிலேயே புடவை, ஜாக்கெட் முதலானவற்றை வாங்கிவிட்டு அவர்களுக்கு பிரமோஷனும் தராமல் ஏமாற்றி விடுவதாக வீடியோவில் ஒரு பெண் பேசி இருக்கிறார்.

கம்பம் மீனா பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கம்பம் மீனா, இன்ஸ்டா மூலம் பொட்டிக் வைத்திருப்பவர்கள் பலருமே அறிமுகமாகி இருக்கிறார்கள். அப்படி அறிமுகமானவர் தான் அந்த பெண். அவர்களுக்கு ஒரு ப்ரோமோஷன் செய்து தரும்போது நமக்கு அதுக்கான டிமாண்ட் கேட்பது வழக்கம் தான். அப்படித்தான் நானும் பண்ணிட்டு வருகிறேன். இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு அப்படி பேசி தான் சில சேலைகள் பிளவுஸ் தருவதாக சம்மதித்தார்கள். முதலில் ஒரு செட் அனுப்பி வைத்தார்கள். அனுப்பி வைத்ததற்கு நான் பிரமோஷன் கொடுத்து விட்டேன்.

சர்ச்சைகளுக்கு பதிலடி:
பின் அவர்கள் பேசின மாதிரி தர மறுத்தார்கள். அதனால் நானும் அவர்களுடன் தொடர்பை விட்டுவிட்டேன். இந்த சூழலை திடீரென்று ஒரு வீடியோ போட்டு நான் ஓசியில் சேலை கேட்கிறேன் என்று பேசியிருக்கிறார்கள். வீடியோ வந்ததுமே அவர்களை தொடர்பு கொண்டு நான் பேசினேன். போனை கட் பண்ணி விட்டார்கள். ஒரு பிசினஸ்னா ரெண்டு பேருக்கும் சமமாக ஏதாவது டிமாண்ட் இருப்பது வைப்பது வழக்கம் தான். அப்படி இருக்கும்போது என்னை ரொம்பவே அசிங்கப்படுத்தி வீடியோ போட்டுட்டு இப்ப போனை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் மீது நான் புகார் தரலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.






