நாக சைதன்யாவிற்கு Come Back கொடுத்தாரா வெங்கட் பிரபு – ‘கஸ்டடி’ விமர்சனம் இதோ.

0
1165
custody
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட் பிரபு. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கஸ்டடி. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி செட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சம்பத், பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிருக்கும் கஸ்டடி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் 90 காலகட்டத்தில் ஆந்திராவில் நடக்கும் கதை. ராஜமுந்திரியில் நடக்கும் வெடி விபத்தில் குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்படுகிறார்கள். இந்த வழக்கு சிபிசிஐயிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் மிகப்பெரிய ரவுடியாக அரவிந்த்சாமி இருக்கிறார். இவரை சிபிஐ அதிகாரி சம்பத் பிடிக்கிறார். அப்போது நடக்கும் கார் விபத்தில் இருவருமே போலீசில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கின்றனர். பின் அரவிந்த் சாமியை காப்பாற்ற முதலமைச்சர் பிரியாமணி, போலீஸ் உயர் அதிகாரி சரத்குமார் உட்பட பலரும் முயற்சிக்கின்றார்கள்.

- Advertisement -

ஆனால், இவர்களை எதிர்த்து சம்பத்துடன் சேர்ந்து நாக சைதன்யா போராடுகிறார். பின் அரவிந்த்சாமியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த செல்கிறார். இதற்கிடையில் நாக சைதன்யா- கீர்த்தி செட்டியும் இணைகிறார்கள். ஆனால், அரவிந்த் சாமியை காப்பாற்ற முயற்சி செய்தவர்களே அவரை கொல்ல முயற்சிக்கிறார்கள். இதன் பின்னணி என்ன?அரவிந்த் சுவாமி உடன் செல்லும் நாலு பேரின் நிலைமை என்ன? அரவிந்த் சுவாமியை நாக சைதன்யா காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா மிரட்டி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து படத்தின் படத்தின் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். படத்தின் முதல் அரை மணி நேரம் தெலுங்கு டப்பிங் படம் பார்த்தது போல இருக்கிறது. அந்த அளவிற்கு பார்வையாளர்களின் சோதனையை சோதித்து இருக்கிறது. அதற்குப் பின்பு போலீஸிடம் அரவிந்த்சாமி சிக்கி நடக்கும் காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக செல்கிறது.

-விளம்பரம்-

படத்திற்கு பின்னணி இசை பக்கபலமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் எல்லாம் நிறைய பிளாஷ்பேக் காட்சிகள் வருகிறது. ஆனால், அதில் நிறைய லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது. அதேபோல் படத்தில் அரவிந்த் சுவாமியை கொல்ல நினைக்கும் காரணமும் பெரிதாக இல்லை. பாடல்களும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிக்கும்படியாக இல்லை. கீர்த்தி செட்டி உடைய கதாபாத்திரம் பெரிதாக இல்லை என்றாலும் படம் முழுக்க வருகிறார். இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் வழக்கமான ஜாலி கமர்சியல் படமாக கஸ்டடி படம் இருக்கிறது.

நிறை:

நடிகர்களின் நடிப்பு

பின்னணி இசையும், ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்

கமர்சியல் படம்

இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது

குறை:

முதல் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ஆங்காங்கே நிறைய லாஜிக் குறைபாடுகள்

கதைக்களத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்

கிளைமாக்ஸ் காட்சிகளில் அழுத்தம் கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் கஸ்டடி – ரசிகர்களை கட்டி போடவில்லை

Advertisement