தன்னை விமர்சித்த பிரபலங்களை வெளுத்து வாங்கும் வகையில் மணிமேகலை போட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை செய்தி தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.
மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:
இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை மோசமாக விமர்சித்தும், திட்டியும் வருகிறார்கள். ஆனால், தற்போது சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார்.
ப்ரியங்காவிற்கு ஆதரவு:
அதே போல் பாவனி , டிஜே பிளாக் ,சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் பிரியங்காவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பேசி இருந்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை மணிமேகலை போட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து தன்னை விமர்சித்த பிரபலங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். அப்போது உசேன் காரின் உள்ளே நுழையும் போது, நீ எனக்கு எந்த வீடியோவும் போடலையா? என்று கேட்க, நான் அப்படி இல்லை. என்னை பார்த்து கேட்கிறாயா? என்று உசேன் கேட்கிறார்.
விமர்சனங்களுக்கு சொன்ன பதிலடி:
அதற்கு மணிமேகலை, என் கூட இருக்கிறவங்க, ரொம்ப நெருக்கமானவர்கள், நண்பர்கள் தான் முதுகில் குத்துறாங்க. எனக்கு எதிராகவும் வீடியோ போடுறாங்க. whatsappல வந்து ஒன்னு பேசிட்டு ஆனா அடுத்த நாளே வீடியோவில் வேற மாதிரி பேசுறாங்க. நீ தான் சரின்னு சொல்றாங்க, வாழ்த்து சொல்றாங்க. ஆனால், பின்னாடி போய் திட்டுறாங்க. இத்தனை வருஷமா இருந்தாங்க என்று யாரையுமே நம்பிடாதீங்க, உங்களுக்கு துரோகம் செய்வாங்க பிரண்ட்ஸ் என்று குரேஷியை தாக்கி தான் கூறி இருக்கிறார்.
பிரியங்கா சொம்புகளை பொளத்த மணிமேகலை 😄😄
— DDK Tamil (@DdkTamil67953) September 21, 2024
Kuraishi
Sunita
Shakeela
Fatman
Joker
Pavani
Amir
Pooja
Djblack
மற்றும் பலர்😄😄@iamManimegalai#Manimegalai#priyanka pic.twitter.com/KiVPwtYwo1
வெளுத்து வாங்கிய மணிமேகலை:
அதற்குப்பின் உசேன், நான் மம்மி கிட்ட சொல்றேன்னு சொன்னவுடன் மணிமேகலை, நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணதுல என் ஒரிஜினல் மம்மிக்கு கவலையில்லை. தேவையில்லாத மத்த மம்மிங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனைன்னு தெரியல. விடு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார். பின் மணிமேகலை தண்ணீர் வேண்டும் என்று கேட்டதற்கு உசேன் சொம்பு கொன்டு வந்து கொடுத்தார். உடனே மணிமேகலை, சொம்பை தூக்கி போட்டு சொம்புகளுக்கு என்னடா மரியாதை என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் சொம்பு என்று பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியிருந்த குரேஷி, சகிலா, பாவனி, அமீர், ரவீந்தர், சுனிதா, பூஜா ஆகியோரை தான் குறிப்பிட்டு சொல்கிறார் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது.