வீடியோவை டெலீட் செய்தும் கொத்தமாக மாட்டிய இன்ஸ்டா Cringe மன்னன் மீது பாய்ந்த வழக்கு – இது தான் வீடியோ.

0
596
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகமாகி வருகிறது. இதனாலே புதிது புதிதாக ஆப்புகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக whatsapp, youtube, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள ஆப்புகள் அதிகமாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இதில் நன்மைகள் நிறைய இருந்தாலும் இதை தீய வழியிலும் இளைஞர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப்புகள் மூலம் இன்றைய தலைமுறையினர் நிறைய சீர்கேடுகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில்
ஆபாச வீடியோக்கள், ஆபாச புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் பல பேர் வாழ்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இதை சைபர் கிரைம் போலீஸ் கண்காணித்து வழக்கு பதிவு செய்து வருகிறது.

- Advertisement -

இன்பா ட்ராக் வீடியோ:

அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விஜய் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 26 வயதாகிறது. இவர் இணையம் மற்றும் சமூக வலைத்தள குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகிறார். அந்த வகையில் இவர் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளமான youtube மற்றும் இன்ஸ்டாகிராமை பார்த்திருக்கிறார். அப்போது இன்பா ட்ராக் என்ற பெயரில் நபர் ஒருவர் ஆபாசத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.

வீடியோவில் பயன்படுத்துவது:

அது மட்டும் இல்லாமல் இவர் அதை ஆபாசமாக பேசுவதையும் டெக்ஸ்ட் செய்து மோனோ ஆக்டிங் மூலம் வீடியோக்களை பதிவேற்றி இருக்கிறார். இவருடைய மோனோ ஆக்டிங் வீடியோக்கள் பார்ப்பதற்கே அருவருக்கத்தக்கவும், ஆபாசமான முறையிலும் இருக்கிறது. இந்த வீடியோக்களை பார்க்கும் மாணவ மாணவியர்கள் மட்டுமில்லாமல் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மனநிலையும் மாறும். அதோடு இவருடைய வீடியோக்கள் எல்லாம் பாலுணர்வை தூண்டும் வகையிலும், கணவன்- மனைவி உறவு முறை பற்றியும் ஆபாசமாக பேசி நடித்து வீடியோக்களை பதிவேற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

வீடியோ குறித்த தகவல்:

குறிப்பாக முதலிரவு பற்றி நிறைய வீடியோக்களை இவர் போட்டு இருக்கிறார். அதிலும் பெண்களைப் பற்றி தவறாக சித்தரித்து மோனோ ஆக்டிங் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். இதனால இவரை சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான பேர் பாலோ செய்கிறார்கள். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் 82,000க்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் இருக்கிறார்கள். youtube இல் ஒரு லட்சத்து 93-வது சப்ஸ்கிரைப் இருக்கிறார்கள். இவருடைய வீடியோக்கள் குழந்தைகள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய வகையில் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பாலியல் குற்ற செயலிலும் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.

போலீஸ் விசாரணை:

அதுமட்டுமில்லாமல் இந்த இளைஞர் சமுதாயத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் வீடியோக்களை பதிவேற்றி இருப்பது மிகவும் தவறான ஒன்று. இது தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண் 32/23. U/s 292(a), 294(b), 509 IPC & 67. 67-А, 67-B of IT Act. & 4 r/w 6 of Indecent Representation of Women (Prohibition Act.) ஆகிய படி இந்த ஐடியை பயன்படுத்தும் நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இது போன்ற வீடியோக்களை பதிவேற்றுபவர்களையும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Advertisement