யாரும் உதவ வரல, உதவிக்காக காத்திருந்த விஷ்ணு விஷால் – 4 மணி நேரத்தில் நேரில் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்ட மீட்புக்குழு

0
386
- Advertisement -

சென்னையில் கனமழை வெள்ளத்தால் தன்னுடைய நிலை குறித்து விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கும் பதிவுதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு கொண்டு வருகிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது.

-விளம்பரம்-

இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. போக்குவரத்து வசதிகளும் ஸ்தம்பிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

அது மட்டுமில்லாமல் மழையுடன் சேர்ந்து பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் கீழே விழுந்து இருக்கின்றது. இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். ஆகவே, தொடர் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதோடு வரலாறு காணாத மழை என்பதால் விமான, ரயில், பேருந்து என அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கி போயிருக்கிறது.

விஷால் ஆதங்கம்:

மேலும், இன்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் நேற்று நடிகர் விஷால், தன்னுடைய வீட்டில் தண்ணீர் புகுந்து புகுந்திருப்பதை குறித்து மாநகராட்சி மேயரையும் அதிகாரியையும் விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

விஷால் விமர்சனம்:

குறிப்பாக, சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக அரசு 4000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. அதெல்லாம் என்ன ஆனது? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார். இவரை எடுத்து நடிகர் ரோபோ சங்கர், தன்னுடைய வீட்டின் முன்பு தண்ணீர் தேங்கி இருப்பது குறித்து வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், காரப்பாக்கத்தில் உள்ள என் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. அதன் அளவும் போகப்போக மோசமாக உயர்ந்து வருகிறது.

விஷ்ணு விஷால் பதிவு:

உதவி கேட்டு அழைத்திருக்கிறேன். இங்கு கரண்ட் இல்ல, வைஃபை இல்ல, போன் சிக்னல் இல்ல, எதுவுமே இல்ல. என் வீட்டு மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன். சென்னை மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறி தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் இருந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷாலின் வீட்டை சுற்றி தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. இப்படி இவர் பதிவிட்ட 4 மணி நேரத்தில் மீட்பு குழு இவரது பகுதிக்கு சென்று இவரை படகில் ஏற்றி வந்து இருக்கிறது.

Advertisement