ஒரு ரூபாய் இட்லி விற்று கஷ்டப்படும் பாட்டிக்கு இசையமைப்பாளர் இமான் செய்திருக்கும் உதவி குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இமான். சமீப காலமாகவே இமான் அவர்கள் தன்னுடைய இசையில் பல மாற்றுத் திறனாளிகளுக்கு பாட வாய்ப்பளித்திருப்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலில் இவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்திக்கு தான் வாய்ப்பு தந்தார்.

அவரைத் தொடர்ந்து வைக்கோம் விஜயலட்சுமியை பாட வைத்தார். இவர் கடந்த ஆண்டு சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய மாற்றி திறனாளி சிறுமி சகானாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் இமானை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள். பின் கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள பகுதியில் பல ஆண்டுகளாக முப்பதுக்கு மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

இமான் செய்யும் உதவி:

இவர்கள் தங்கி உள்ள வீடுகள் அனைத்துமே சேதம் அடைந்து மோசமான நிலைமையில் இருந்தது. இதை அறிந்த இமான் அவர்கள் தன்னால் முடிந்த அளவிற்கு வீடு கட்டி கொடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தனியாக டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் வயதான பாட்டிக்கு இமான் செய்திருக்கும் உதவி குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

பாட்டியின் நிலைமை:

அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வயதான பாட்டி ஒருவர் ஒரு ரூபாய்க்கு இட்லி, ஒரு ரூபாய்க்கு வடை என்று விற்று கொண்டிருக்கிறார். இதை இவர் 40 வருடமாக செய்து கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு ஒரு லாபமும் கிடையாது. இருந்தாலும், வருபவர்களுடைய பசியை தீர்ப்பதற்காக இவர் குறைந்த விலையில் விற்றுக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட பாட்டிக்கு சரியான வீடு இல்லை.
இவருடைய கூரை விடும் மலை, காற்றால் சேதம் அடைந்திருக்கிறது.

Advertisement

இமான் செய்த உதவி:

இதை அறிந்த நெட்டிசன் ஒருவன் சோசியல் மீடியாவில் இது தொடர்பாக பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். இதைப் பார்த்த இமான் அவர்கள் அந்தப் பாட்டிக்கு வீடு கட்டுவதற்கு தேவையான உதவிகளை செய்து தந்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலருமே இமானுடைய நல்ல மனசையும், அவர் செய்து வரும் சமூக சேவையை பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான்.

இமான் குறித்த தகவல்:

இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். நடிகர்களின் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். அதோடு கிராம கதையம்சம் கொண்ட கதைக்கு தான் இவர் அதிகம் இசை அமைத்து இருக்கிறார்.

Advertisement