நாக சைதன்யா மன்னிப்பு கேட்டது குறித்து நடிகை தக்ஷா நகர்கர் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இதனிடையே நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். பின் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா அவர்கள் பல படங்களில் மிரட்டிக் கொண்டு வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நாக சைத்தன்யா குறித்து நடிகை தக்ஷா நகர்கர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தக்ஷா நகர்கர் மிக பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் இந்திய மாடலும் ஆவர். 2014 ஆம் ஆண்டு தான் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். பின் தெலுங்கு மொழி படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு நாகச் சைதன்யாவின் நடிப்பில் வெளிவந்திருந்த பங்கர் ராஜுவில் “எந்த சக்ககுண்டிரோ” என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நாக சைதன்யாவுடன் பணிபுரிந்தது கூறியிருந்தது, நாக சைதன்யா பெண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு இனிமையான, எளிமையான மனிதர். ஒரு காட்சியில் முத்தமிடவோ அல்லது கட்டிப் பிடிக்கவோ நெருங்கும் போதெல்லாம் அவர் மன்னிப்பு கேட்பார். அது அவருடைய மரியாதைக்குரிய தன்மை என்று புகழ்ந்து கூறியிருந்தார்.