காதல் தேசம் பட பிரபலம் காலமானார் – 90ஸ் கிட்ஸ்களால் இந்த பாட்ட மறக்க முடியுமா ?

0
431
Cool Jayanth
- Advertisement -

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் காலமான செய்தி சினிமா உலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரபுதேவா மற்றும் ராஜூ சுந்தரத்தின் குழுவில் நடன கலைஞராக இருந்தவர் கூல் ஜெயந்த். இவர் இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த காதல் தேசம் படத்தின் மூலம் தான் நடன இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதிலும் இந்த படத்தில் கல்லூரி சாலை, முஸ்தபா முஸ்தபா ஆகிய இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய், அஜித், மம்முட்டி மோகன்லால் போன்ற மிகப் பெரிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருந்தார். மேலும், இவர் 800 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணி புரிந்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கூல் ஜெயந்த் நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

சினிமாவில் நடன இயக்குனராக இருந்து நடிகரான பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் வரிசையில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூல் ஜெயந்த் அவர்களின் இறப்பு செய்தி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் அவர்கள் சமீபத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கூல் ஜெயந்த் அவர்கள் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவு செய்தி சினிமா உலகில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழ், மலையாளம் என பல பிரபலங்கள் இவருடைய இறப்பு செய்தி அறிந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஜெயந்த் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement