பலர் உதவி செய்தும் உயிர் பிரிந்த சிவ ஷங்கர் மாஸ்டர் – சோகத்தில் திரையுலகம்.

0
534
shivashankar
- Advertisement -

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் மாஸ்டர் நேற்று காலமான விஷயம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீபகாலமாக இவருக்கு நடனத்திலும், நடிப்பிலும் வாய்ப்புகள் குறைந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் இவரின் உடல்நிலை மோசமாகி தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

- Advertisement -

மேலும், இவரின் சிகிச்சைக்கு அதிக செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறிஇருந்தார்கள். ஆனால், சிகிச்சைக்கான கட்டணத்தை அவருடைய குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை. எனவே, என் அப்பாவை காப்பாற்ற உதவுங்கள் என்று கூறி இருந்தார். இதை தொடர்ந்து தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பண உதவி செய்து இருந்தார்.

இதை தொடர்ந்து நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சோனு சூட் போன்ற பலர் உதவி செய்ய முன் வந்தனர்.இந்நிலையில் சிவசங்கர் மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளார். இந்த செய்தி தற்போது திரையுலகில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

-விளம்பரம்-
Advertisement