சிவகார்த்திகேயன் அண்ணா மாதிரி எந்த நடிகரும் கேரிங்கா இருந்ததில்லை. டான்ஸர் பிந்து சொன்ன பதில்

0
35107
- Advertisement -

சினிமாவில் நடிகர்களுக்கு பின்னால் ஆடும் குரூப் டான்ஸர்களை பற்றி பலருக்கும் தெரியாது. அந்த குரூப்பில் டான்ஸ் ஆடும் சிலர் தங்களுடைய முகம் மக்களுக்கு தெரிந்தால் மட்டும் போதும் என நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு அந்த நடிகர்களுடன் தனியாக ஆடும் வாய்ப்பு கிடைத்தால் அது அவர்களுடைய அதிர்ஷ்டம் தான். அப்படிப்பட்ட அதிஷ்டம் அடித்த பெண் டான்ஸர் பிந்து. இவர் நடிகர்களுக்கு பின்னால் ஆடும் குரூப் டான்ஸர்களில் ஒருவர். இவருக்கு மூன்று முறை நடிகர்களுடன் தனியாக ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது பிரபுதேவா, லாரன்ஸ், தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி இருக்கும் இவர்களுடன் ஹிட் பாடல்களில் ஆடியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் டான்ஸர் பிந்து அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் நடிகர் சிவகார்த்திகேயனை குறித்து பேசி இருந்தார். அதில் அவர் கூறியது, இப்போ நான் சாண்டி மாஸ்டர் கிட்ட அசிஸ்டென்ட் கோரியோகிராஃபராக இருக்கேன். நான் பல மாஸ்டர்களோட பாடல்களில் டான்ஸும் பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பாராட்டு என்றால் அது சிவகார்த்திகேயன் அண்ணாவோட பாராட்டு தான். பிரபு தேவா அவர்களின் குலேபகாவலி படத்தின் ரிலீஸ் சமயத்தில் தான் சீமராஜா படத்திற்கான ஷூட்டிங் நடந்துச்சு.

- Advertisement -

என்னை பார்த்ததுமே சிவா அண்ணன் கூப்பிட்டார். நீங்க மாஸ்டரோடு சேர்ந்து ஒரு கலக்கி கலக்கி இருக்கீங்களே என்று சொன்னார். பின் அதே மாதிரி நாமும் ஒரு பாட்டு ஆடுவோம் என்று சொன்னார். சிவா அண்ணா என்னை கூப்பிட்டு பாராட்டியது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. சீமராஜா ஷூட்டிங் முடிஞ்சதும் நான் சென்னைக்கு சென்றேன். அப்போ எனக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. எனக்கு ஆக்சிடென்ட் ஆனதை கேள்விப்பட்டதும் என் நம்பரை வாங்கி எனக்கு சிவா அண்ணா போன் பண்ணார்.

என்னை நீ ஒரு அண்ணனாக நினைச்சீங்கன்னா மருத்துவ செலவுக்கு பணம் தேவை என்றால் தயங்காமல் கேளுங்கள் என்று சொன்னார். இது வரைக்கும் எந்த நடிகரும் இந்த அளவுக்கு குரூப்பில் ஆடும் டான்ஸர் இடம் இவ்வளவு அக்கறை எடுத்து பேசியது கிடையாது. அவர் இப்படி சொன்னதில் நான் ரொம்ப எமோஷனல் ஆகி விட்டேன். உண்மையாலுமே எனக்கு சிவகார்த்திகேயன் கூட பிறக்காத அண்ணா என்று கண்கலங்கிய படி கூறினார்.

-விளம்பரம்-
Advertisement