நெருப்பு கூத்தடிக்குது முதல் ரவுடி பேபி ஆசை வரை – பல எமோஷனல் விஷயங்களை பகிர்ந்த 90ஸ் டான்ஸர் லேகா.

0
461
lekha
- Advertisement -

தன்னுடைய திரை பயணத்தை குறித்து முதன் முதலாக நடிகை லேகா ஸ்ரீ அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகச்சிறந்த டான்ஸராக இருந்தவர் லேகா ஸ்ரீ. இவர் டான்ஸர் மட்டும் இல்லாமல் நடிகையும் ஆவார். இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என பல காமெடி நடிகர்களின் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.மேலும்,2k காலகட்டங்களில் வெளியான பல படங்களில் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சோலோ டான்ஸ் ஆடி இருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என பல மொழி படங்களில் நடனம் ஆடி இருக்கிறார். இதற்கு இடையில் லேகா ஸ்ரீ திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லேகா ஸ்ரீ என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் லேகா ஸ்ரீ அவர்கள் ஷகிலா நடத்தி வரும் நிகழ்ச்சியில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.அதில் அவர் தன்னுடைய திரை பயணம் குறித்து கூறியிருந்தது, பலரும் நான் சினிமாவில் இருந்து விலகியது குறித்து கேட்டு வருகிறார்கள்.

- Advertisement -

எப்போது நடிப்பீர்கள்? மீண்டும் மீடியாவிற்குள் வருவீர்களா? என்றெல்லாம் கேட்கும்போது நம்மளையும் மக்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பது நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு நடிப்பை விட நடனத்தில் தான் அதிக ஆர்வம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பழமொழி படங்களில் சோலோவாக நடனம் ஆடி இருக்கிறேன்.ஒருமுறை ஜீவா நடிப்பில் ஆசை ஆசையாய் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்டிருந்தார்கள்.

அப்போது நான் சொக்கத்தங்கம் பட சூட்டிங்கில் இருந்தேன். முதலில் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னேன். இயக்குனர் இந்த வாய்ப்பை விடாதே டபுள் ரோல் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதனால் சரி என்று நடிக்க ஒத்து கொண்டேன். அப்போது ஜீவா படத்தில் நடனமாட கேட்டிருந்தார்கள். இயக்குனர் மீறி ஏதும் செய்ய முடியாது என்பதால் என்னால் ஆட முடியாது என்று சொல்லிவிட்டேன்.

-விளம்பரம்-

நடனம் ஆட முடியாதுன்னு சொன்னது காரணம்:

அதற்கு பிறகு ஆசை ஆசையை பட தயாரிப்பாளர் சௌத்திரி அவர்கள் நேரடியாக இயக்குனர் பாக்யராஜ் சார் இடம் பேசி பர்மிஷன் வாங்கினார். நான் அந்த பாடலில் பாதி தான் நடனம் ஆடி இருப்பேன். ஷூட்டிங் போது செம்ம மழை. கொடுத்த கால்ஷீட் முடிந்து விட்டது. அதனால் நான் மீண்டும் படத்திற்கு வந்து விட்டேன். நிறைய பாடல்களில் நடனம் ஆட முடியாமல் வாய்ப்பு தவறி இருக்கிறது. எனக்கு தனுஷின் மாரி படத்தில் வெளிவந்த ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன்.

வடிவேலு-லேகா ஸ்ரீ குறித்த கிசு கிசு:

என்னுடைய அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது அஜித் சார் நேரில் வந்து சந்தித்து உனக்கு அண்ணா இல்லை என்று கவலைப்படாதே உனக்கு அண்ணன் நான் இருக்கிறேன். உனக்கு ஏதாவது கடை வைத்து தருகிறேன் சினிமாவை விட்டுவிட்டு அம்மாவை கவனத்தில் கொள் என்று அஜித் சார் சொன்னார்.ஆனால் எனக்கு டான்ஸ் மிகவும் பிடிக்கும் என்பதால் என்னால் அதை விட முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement