உனக்கு ஷெரின் பதில் சொல்லுவார் தர்சன்.! கவினை கேள்வி கேட்டதால் கடுப்பான நடிகர்.!

0
22508
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே கவின், சாக்க்ஷி,லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் பிரச்னை தான் ஓடிக்க்கொண்டு இருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கவினிடம் லாஸ்லியா நெருக்கமாக இருப்பதை சாக்க்ஷி சுட்டிக்காட்டியதால் லாஸ்லியாவிற்கும் சாக்ஷிக்கும் முட்டிக்கொண்டது.

-விளம்பரம்-

கவின் தான் சாக்க்ஷியிடம் நெருக்கமாக பழகிவிட்டு தற்போது லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் தான் சாக்க்ஷி காயப்பட்டுள்ளார் என்று மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நினைத்து வருகின்றனர். இன்றைய ப்ரோமோ ஒன்றில் தர்ஷன், கவினிடம் நைட் 2 மணிக்கு லாஸ்லியாகிட்ட என்ன பிரண்ட்ஷிப் வேண்டி இருக்கு என்று கேள்வி கேட்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது சினிமாவில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் சதீஷ், தர்ஷன் குறித்து ட்வீட் செய்துள்ளார். சதீஷ், சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் நண்பராக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தர்ஷன், கவினை கேள்வி கேட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சதீஷ், நீ கேட்ட கேள்வி என் ரத்தத்தை கொதிக்க வைக்கிறது தர்ஷன். இதற்காகவே நான் கவின் ஆர்மியில் சேர்ந்து விடுகிறேன். அவனை கேள்வி கேட்கிறாயே இரவு நேரத்தில் நண்பர்கள் பேச மாட்டார்கள் என்று நினைத்தாள் அது உன்னுடைய தப்பு.ஓ குரல் கொடுக்கிறீர்களோ? கவலைப்படாதீர்கள் அதற்கு சரியான பதில் அளிப்பார்.

-விளம்பரம்-

சாக்க்ஷி மற்றும் கவின் இருவரும் காதலிப்பதாகவே வைத்துக் கொள்வோம் அவர்களுக்கு செட்டாகவில்லை அதனால் பிரிந்துவிட்டார்கள். அதற்கு இப்போ என்ன? நீங்கள் யார் என்ன பேச வேண்டும், எந்த நேரத்தில் பேச வேண்டும் என்று கூறுவதற்கு . நீங்கள் பேசியது தவறான செயல் தர்ஷன் அது உங்களை வீழ்த்தி விடும் என்று கமெண்ட் செய்துள்ளார்.

Advertisement