விஜய்க்காக என் உயிரையும் தருவேன்..! சொன்னது யார் தெரியுமா..! புகைப்படம் உள்ளே

0
1450
- Advertisement -

விஜய் டிவியில் பிரபல நடன நிகழ்ச்சிகளாக “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றவர் சுனிதா. இவர் தான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

actress sunitha

- Advertisement -

அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி” நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறைபோட்டியாளராக பங்குபெற்று வந்தார். மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வரும் இவர் தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் குடித்து விட்டு கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தி விட்டார் என்று கூட ஒரு சில வீடியோகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.ஆனால் தான் காரை ஒட்டவில்லை என்றும், அவருடைய டிரைவர் தான் காரை ஓட்டினார் என்று கூட பின்னர் தெரிவித்தார்.

-விளம்பரம்-

sunitha dancer

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்குபெற்ற சுனிதா, நடிகர் விஜய்யை பற்றி பேசுகையில்’நான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த பிறகு , முதன் முதலில் விஜய் நடித்த சுறா படத்தை தான் பார்த்தேன்.அந்த படத்திலிருந்து நடிகர் விஜயை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அன்று முதல் அவரின் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன், அவருக்காக நான் உயிரையும் கொடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement