நாம ரெண்டு பெரும் சொந்தக்காரங்கன்னு சொன்னார் – ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சொன்னது குறித்து டேனியல் பாலாஜி சொன்ன பழைய பேட்டி.

0
184
- Advertisement -

தமிழில் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வடசென்னை போன்ற பல பாடங்களில் நடித்த டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வெற்றிமாறன், அமீர் ஆகியோர் நேற்று இரவே நேரில் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்தனர். டேனியல் பாலாஜி அம்மாவும், நடிகர் முரளி அம்மாவும் உடன்பிறந்த சகோதரிகள்.

-விளம்பரம்-

டேனியல் பாலாஜி, முரளியின் உறவினர் என்பது பலருக்கு தெரிந்தாலும் அவர் விஜய்யின் உறவினர் என்பது பலருக்கும் தெரியாது. அதாவது ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கும் கடந்த2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. அதற்கு முன்பாக விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்த போது அந்த விஷயத்தை விஜய் தான் டேனியல் பாலாஜியிடமே கூறி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது டேனியல் பாலாஜி தொகுப்பாளர் டேனியல் பாலாஜியிடம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான முரளி உங்களுடைய அண்ணன் என்று சொல்கிறார்கள்.இது குறித்து நீங்கள் எதுவும் கூறவில்லையே என்று கேட்டுள்ளார். அதற்கு டேனியல் பாலாஜி அவர்கள் கூறியிருப்பது, நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான்.

வீடியோவில் 14 : 25 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

நாங்க தெலுங்குகாரர். முரளி அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஆனால், என்னுடைய அம்மாவும், முரளி உடைய அம்மாவும் அக்கா தங்கைகள். அந்த வகையில் முரளி அவர்கள் என்னுடைய அண்ணன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து தொகுப்பாளர் நடிகர் முரளியின் மகனுக்கும், விஜயின் மாமா மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்து நீங்களும், விஜய்யும் பேசியிருக்கிறீர்களா?என்று கேட்டுள்ளார்.

அதற்கு டேனியல் பாலாஜி அவர்கள் கூறியது, நான் விஜய் அண்ணாவுடன் பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது நிறைய விஷயங்களை பேசுவோம்.அப்படி ஒரு நாள் நாங்கள் இருவரும் நடனம், படங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது விஜய் அண்ணா நம்ம ரெண்டு பேரும் சொந்தக்காரர்கள் ஆகப் போகிறோம் தெரியுமா என்று கேட்டார். அதற்கு நான் என்ன சொல்றீங்க புரியல அண்ணா என்று கேட்டேன்.

அதற்கு விஜய் அண்ணா ஆமாங்க, உங்க அண்ணன் முரளி பையனும், என் மாமா பொண்ணும் காதலிக்கிறார்கள்.அது வீட்டில் பேசி முடிவாகி இருக்கு என்று சொன்னார். உடனே நான் அப்படியா அண்ணா நல்ல விஷயம் தான் என்று சொன்னேன். பிறகு நிச்சயதார்த்த சமயத்தில் நான் வெப்ஸ் சீரிஸ் ஷூட்டிங்காக வெளியே சென்று இருந்தேன். அதனால் என்னால் வர முடியாமல் போனது என்று கூறினார் டேனியல் பாலாஜி.

Advertisement