அம்மாவுக்கு கோவில் கட்டுவதால் யாஷ் கேட்டும் அவர் படத்தில் நடிக்க மறுத்துள்ள டேனியல், போனை கட் செய்ததும் அவருக்கு வந்த இன்ப அதிர்ச்சி.

0
844
yash
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவருக்கு டேனியல் என்ற பெயர் சித்தி சீரியலில் நடிக்கும் போதுதான் வந்தது. இவர் அந்த சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் சித்தி முதல் பாகத்தில் டேனியல் பாலாஜி திருந்தி விடுவார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். மேலும், நடிகர் பாலாஜி அவர்கள் விஜய்யின் பிகில் படத்திலும் , தனுசின் அசுரன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் வெப்ஸ் சீரியசிலும் நடித்து வருகிறார். சமீபாத்தில் கூட ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

நடித்து வரும் படம் :

இப்படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் நல்ல வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா மோகன், சந்திப் கிஷான், ஜான் கோகேன், நாசர், மூர், நிவேதா சதிஷ் போன்றவர்கள் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இடப்பதில் தனுஷ் நீண்ட தாடி மாற்றம் முடியுடன் இப்படத்தில் நடித்து வருகிறார்.

கோவில் கட்டிய டேனியல் பாலாஜி :

இந்நிலையில் தான் இப்படத்தில் நடித்து வரும் நடிகர் டேனியல் பாலாஜி கோவிலுக்கு பெயிண்ட் அடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலாகி இருந்தது. உண்மையில் இவர் பெயின்ட் அடித்துகொண்டிக்கும் கொண்டிருக்கும் கோவில் சென்னை ஆவடியில் உள்ள ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலாகும். இந்த கோவிலை டேனியல் பாலாஜி தான் தன்னுடைய சொந்த செலவில் பல கோடிகள் செலவு செய்து கட்டி முடித்தார். அந்த கோவிலுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அவர் இந்த கோவிலை தன்னுடைய அம்மாவின் ஆசைக்காக கட்டினார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

யாஷ் உடனான தொலைபேசி உரையாடல் :

இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய டேனியல் பாலாஜி பிரபல தெலுங்கு நடிகரான யாஷ பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு படத்தில் நடிக்க யாஷ் இவரை அழைத்தாராம். ஆனால் அந்த நேரத்தில் தான் கோவில் கட்டுவதற்க்கான பணிகள் தொடங்கி இருந்தது. மேலும் அதற்கான கற்களும் அப்போதுதான் வந்து இறங்கியிருக்கிறது. இதனால் தன்னால் அடுத்த 20 நாட்கள் எங்கேயும் செல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே :

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே நடிகர் யாஷ் என்னுடைய வாங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார். அது அவரிடம் இருந்து தான் வந்தது என்பதனை உணர்ந்த நான் தயாரிப்பாளரைச் சந்திக்காமலே ஏன் பணத்தை அனுப்பினீர்கள் என்று கேட்டேன் அதற்கு யாஷ் “இது கோவிலுக்காக தவிர வேறு எவற்றுக்கும் கிடையாது என்று கூறியதாகவும், அவர் அப்படி செய்தது தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார் நடிகர் டேனியல் பாலாஜி.

Advertisement