தனுஷ் தன்னுடைய தந்தையின் கட்டாயத்தினால் தான் சினிமா துறைக்குள் நுழைந்ததாக அளித்து இருந்த பழைய பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு தனுஷ் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். அதோடு தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.
அதிலும் சமீப காலமாகவே ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த் தடத்தை பதித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், தனுஷுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
தனுஷ் விவாகரத்து குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை, ’18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, ஒன்றாக அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம். இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
தனுஷின் விவாகரத்து குறித்து எழும் இன்னல்கள்:
தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் தனுஷ் பேசிய பல வீடியோக்களையும் ரசிகர்கள் இந்த தருணத்தில் மீண்டும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தனுஷ் காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது நடந்த அனுபவங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அது தற்போது மீண்டும் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறி இருப்பது, என்னை கலாய்த்தவர்களே இல்லை. இது காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது நடந்தது. ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது நடந்த அனுபவம்:
அப்போது ஒருவர் என்னிடம் வந்து யார் ஹீரோ?என்று கேட்டார். அப்போது நானே செகண்ட் ஹீரோ சுதீப்பை கைகாட்டி அவர்தான் ஹீரோ என்று சொன்னேன். அந்த நபர் சுதீப் இடம் சென்று கை கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அந்த ஆள் கூட்டத்தில் நின்ற போது வேறொரு உதவி இயக்குனரை பார்த்து யார் ஹீரோ? என்று கேட்டார். அதற்கு உதவி இயக்குனர் எண்ணிக்கை காட்டி அவர் தான் ஹீரோ என்றார். அதற்கு அருகில் இருந்த நபர் என்னப்பா? அவரைப் போய் ஹீரோன்னு சொல்றீங்க? சுதீப் தான் ஹீரோ என்று அவரே சொன்னார். இதையடுத்து மொத்த கூட்டமும் சிரித்தார்கள். ஹே இவரு ஹீரோவா, அந்த ஆட்டோக்காரன் ஹீரோப்பா, ரிக்ஷாக்காரன் ஹீரோப்பா என்று தெலுங்கில் கிண்டல் செய்து சிரித்தார்கள்.
தன் தந்தை மீது தனுஷ் கோபப்பட காரணம்:
அப்போது நான் சின்ன பையன் 17 வயசு அல்லது 18 வயசு தான் எனக்கு இருக்கும். இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் எனக்கு அப்போது கிடையாது. நான் காரில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டு இருந்தேன். மேலும், நான் கல்லூரிக்கு போக ஆசைப்பட்டேன். அப்பா தான் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். அதனால அப்பா மீது எனக்கு செம கோவம் வந்தது இப்படியெல்லாம் என்னை ஏமாற்றி விட்டாரே என்று எங்க அப்பா மீது பயங்கர கோபம் ஆத்திரம் எல்லாம் இருந்தது. அது மட்டுமில்லாமல் இன்னும் என்னுடைய உருவத்தை வைத்து கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.