இணையத்தில் வெளியான தர்பார் படத்தின் காட்சி.! வைரலாகும் வீடியோ.!

0
495

சூப்பர் ஸ்டார் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாகவே படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான பாதுகாப்புகளையும் மீறி இது மாதிரி படங்கள் வெளிவரக் காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம்தான் என படப்பிடிப்பு குழு கண்டறிந்தனர்.

- Advertisement -

இருப்பினும் அடிக்கடி படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் சிறு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement