வெளியான நான்கே நாளில் தொலைக்காட்சியில் தர்பார். வைரலாகும் வீடியோ. படக்குழு அதிர்ச்சி.

0
15212
darbar

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சர்கார் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முதல் முறையாக இந்த தர்பார் படத்தின் மூலம் இணைந்து உள்ளார்கள். இந்த தர்பார் படம் கடந்த வாரம் வெளி வந்தது. இந்த படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.

இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்து உள்ளார். அதோடு படத்தின் ஒவ்வொரும் பாடலும் சும்மா கிழி தான். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். ரஜினிகாந்தின் தர்பார் படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரும் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த தர்பார் படம் பக்கா கமர்சியல் படம் என்று பல கருத்துக்களை சோசியல் மீடியாவில் கூறி வருகிறார்கள். பொதுவாகவே திரையரங்களில் ஒளிபரப்பப்படும் படங்கள் எல்லாம் சில மாதங்களில் கேபிள் சேனல்களில் ஒளிபரப்பு செய்வார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இதையும் பாருங்க : விஜய்யின் இந்த படத்தால் என்னுடைய படங்களை தூக்கினார்கள்- மகேஷ் பாபு வருத்தம்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த தர்பார் படத்தை மதுரை திருமங்கலம் சரண்யா சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான வீடியோ ஆதாரத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்கள். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டும் இல்லாமல் படம் வெளிவந்த உடனே சோசியல் மீடியாவில் படத்தின் திரைவிமர்சனம் வெளிவரும். ஆனால், படம் வந்து 10 நாட்கள் கூட முடியாத நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இதனால் படத்தின் குழுவினரும், ரசிகர்களும் பயங்கர கொந்தளிப்பில் உள்ளார்கள். முன்பு எல்லாம் திருட்டு சிடி பிரச்சனை தான் இருந்தது. ஆனால்,இப்போது நேரடியாகவே படங்களை சேனலில் ஒளிபரப்புகிறார்கள். இதனால் நம்ம நடிகர் சங்க தலைவர் விஷால் அவர்கள் என்ன ஆக்ஷன் எடுக்க போகிறாரோ? அதோடு மதுரை திருமங்கலம் சரண்யா சேனல் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறதோ? இது குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-
Advertisement