பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினியின் 167 வது படமான இந்த படத்திற்கு ‘தர்பார்’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக நயன்தாரா நடிக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்டை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
இதையும் படியுங்க : தொடர்ந்து எழும் அட்லீயின் நிறத்தை பற்றிய கிண்டல்கள்.! அட்லீயின் செமயான பதில்.!
நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகி இருந்த நிலையில் இன்று (ஏப்ரில் 10 ) காலை அந்த படத்தின் பூஜை வெகு விமர்சியாக தொடங்கியது.அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.