டேய் தமிழ் இயக்குனர்களா . இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க. தர்பாரை கழுவி ஊற்றிய IAS அதிகாரி.

0
81094
darbar
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

-விளம்பரம்-

ரஜினிகாந்தின் தர்பார் படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரும் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் இந்த படத்தில் ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த தர்பார் படம் பக்கா கமர்சியல் படம் என்று கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் இரண்டாம் பாதியில் மனித உரிமை அத்துமீறல் குறித்து டீன் செய்யும் வேலைகள், கிளைமாக்ஸ் சண்டை என சிலர் படம் குறித்து குறை சொல்லி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் தயாநிதி அழகிரி அவர்கள் ட்விட்டரில் படம் முதல் பாதி நன்றாக உள்ளது. காமெடி எல்லாம் சூப்பர். ஆனால், திரைக்கதை தான் சுவாரசியமாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷா. பிரியா பவானி ஷங்கரை வர்ணித்து புகைப்படத்தை பதிவிட்ட இயக்குனர்.

- Advertisement -

இப்படி தர்பார் படம் வெளி வந்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த தருணத்தில் 2006 ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்து திருநெல்வேலியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்து உள்ளார். அதோடு இவர் படம் வெளியான முதல் நாள் அன்று ட்விட்டரில் கூறியது, நாலு நாள்ள தலைவன ஃபிட்னஸ் நிரூபிக்க வச்சது தான்யா மிகப் பெரிய ஹூமன் ரைட் வைலேஷன்” என்று தெரிவித்து உள்ளார்.

மற்றொரு டீவீட்டில் அவர் கூறியது, ஐயா, தமிழ் இயக்குனர்களே இனிமேல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியின் பின்புலத்துடன் எந்த படமும் எடுக்காதீர்கள். உங்க லாஜிக் ஓட்டையில் எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது என்றும் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை அனைவரும் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்த போது மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டவர் அலெக்ஸ் பால் மேனன். பின்பு தமிழக அரசு தொடங்கி பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்ட்களால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement