கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷா. பிரியா பவானி ஷங்கரை வர்ணித்து புகைப்படத்தை பதிவிட்ட இயக்குனர்.

0
18162
- Advertisement -

தமிழ் சினிமாவில் உலகில் மிக பிரபலமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். சூப்பர் ஹிட் படங்களான வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியவரும் இவர் தான். பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை என்ற படத்தை எஸ்.ஜே.சூர்யா அவர்களே எழுதியும், இயக்கியும், இசையமைத்தும் நடித்து உள்ளார். பின் தொடர்ந்து மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளி வந்த மான்ஸ்டர் படம் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து காற்றின் மொழி படத்தை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்கள் எஸ்.ஜே.சூர்யா வைத்து “பொம்மை” படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த பொம்மை படம் சைக்கோ மற்றும் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தவிர மற்றொரு கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

இதையும் பாருங்க : வாணி ராணி சீரியல் நடிகரா இப்படி பீர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். என்னவா இருக்கும்?

- Advertisement -

மேலும், இந்த படம் காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்த படத்தை ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த பொம்மை படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பிரியா வெளி வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் நடிகை பிரியா பவானி சங்கர் குறித்து கூறி உள்ளார்.

அதில் அவர் கூறியது, நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் பொம்மை படத்தில் அருமையாக நடித்து உள்ளார். பொம்மை படத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷாவின் நடிப்பு தெரிந்தது என்று கூறி உள்ளார். அது மட்டுமில்லாமல் பல ஆண்டுகளாக சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்த இரண்டு நாயகிகளுடன் பிரியா பவானி சங்கரை ஒப்பிட்டு கூறி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரையும் குறித்து சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது.

-விளம்பரம்-
Advertisement