எல்லாரும் நந்தினி, குந்தவை கெட்டப்ல போஸ் போட்டா, பூங்குழலி கெட்டப்பை போட்டு தெறிக்கவிட்ட தர்ஷா குப்தா.

0
716
darsha
- Advertisement -

பொன்னியின் செல்வன் பூங்குழலி கெட்டபில் தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார். அதிலும், இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இருந்த “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த “மின்னலே” என்கிற தொடரில் நடித்து இருந்தார். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த செந்தூரப்பூவே என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார். இப்படி இத்தனை நாடகத்தில் இவர் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை. ஆகவே, சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு இருந்தார்.

- Advertisement -

தர்ஷா சின்னத்திரை பயணம்:

இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பதால் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாகி இருக்கிறார். அந்த பிரபலத்தினால் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக பேராதரவைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்து இருந்தது.

தர்ஷா குப்தா நடித்த படங்கள்:

திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன். இந்த படத்தில் தர்ஷா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ராதாரவி, கௌதம் வாசுதேவ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், டிக் டாக் புகழ், ஜி பி முத்து உள்ளிட்டோர் படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தர்ஷா குப்தா புகைப்படம்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தர்ஷா குப்தா புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் வந்த பூங்குழலி போல் உடை அணிந்து தர்ஷா போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள்.

Advertisement