அவருக்கு நான் அப்படி என்ன பண்ணேன், ஏன் இப்படி பன்றாரு – பட விழாவிற்கு வெளியில் தேம்பி தேம்பி அழுத தர்ஷா குத்பா.

0
643
Darsha
- Advertisement -

ஓ மை கோஸ்ட் படத்தில் விழாவை முடித்துவிட்டு தர்ஷா குப்தா தேம்பி தேம்பி அழுத வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார். அதிலும், இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இருந்த “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த “மின்னலே” என்கிற தொடரில் நடித்து இருந்தார். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த செந்தூரப்பூவே என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார். இப்படி இத்தனை நாடகத்தில் இவர் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை.

- Advertisement -

தர்ஷா சின்னத்திரை பயணம்:

ஆகவே, சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு இருந்தார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பதால் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாகி இருக்கிறார். அந்த பிரபலத்தினால் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக பேராதரவைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

குக்கு வித் கோமாளி ஏற்படுத்தி கொடுத்த பிரபலம் :

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்து இருந்தது.திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன். இந்த படத்தில் தர்ஷா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ராதாரவி, கௌதம் வாசுதேவ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

‘ஓ மை கோஸ்ட் :

இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், டிக் டாக் புகழ், ஜி பி முத்து உள்ளிட்டோர் படத்தில் நடித்து இருக்கிறார்கள்.சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

தேம்பி தேம்பி அழுத தர்ஷா :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் Pre Release விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை முடித்துவிட்டு வெளியில் வந்த தர்ஷா குப்தா நான் அப்படி என்ன செய்தேன். அவர் என்னை ஏன் அப்படி ப்ரொஜெக்ட் செய்கிறார் என்று தேம்பித் தேம்பி அழுதார். இது குறித்து என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டபோது நான் நடந்து வந்த போது என்னுடைய அசிஸ்டன்ட் என்னுடைய ஆடையை மிதித்து விட்டார் என்று நான் அவரை திட்டியதாகவும் நான் திமிர் பிடித்தவள் என்பது போல ஒரு வீடியோவை வைரலாக்கி வந்தனர். அப்படி செய்தவரை நினைத்து தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement