என்னை மகளாக தத்தெடுத்துகோங்க..! பிரபல இயக்குனரிடம் கேட்ட டிடி! இயக்குனர் போட்ட கண்டிஷன்

0
860
dd

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியில் பல சினிமா நட்சத்திரங்களை பேட்டி எடுத்ததன் மூலம் சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பரிட்சயமானார். குறிப்பாக இயக்குனர் கௌதம் மேனனுடன் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார் டிடி.

gautham-menon

டிடி சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ‘உளவறிவு’ என்ற ஒரு ஆல்பம் பாடலளிலும் நடித்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கூட டிடியும், இயக்குனர் கௌதம் மேனனும் ஒன்றாக சிறப்பு விருந்தினராக சென்றிருந்தனர்.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ”துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்துள்ளார் டிடி. நிலையில் இயக்குனர் கௌதம் மேனனிடம்’ ‘என்னை எப்போது மகளாக தத்தெடுக்க போறீங்க’ என்று கேட்டுள்ளார் டிடி. ஆனால், டிடி அப்படி கேட்டதற்கு காரணம், கௌதம் மேனனின் மனைவி ப்ரீத்தி, டிடி’யை மகளாக தத்தெடுத்துக்கொள்ளலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

d

டிடியின் இந்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் கௌதம் மேனன் “நீ எப்போதும் பிஸியாக தான் இருக்கிறாய். எனக்கு நீ மகளாக இருக்க வேண்டும் என்றால் எப்போதும் நீ என்னுடன் தான் இருக்க வேண்டும், அதற்கு நீ தயாரா?” என்று கூறியுள்ளார்.