இதான் டெடிகேஷன், ஆப்ரேஷன் முடிந்த சில நாளில் வேட்டையன் நிகழ்ச்சியை 5 மணி நேரம் நின்று தொகுத்து வழங்கிய டிடி

0
466
- Advertisement -

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடக்க முடியாமல் கைதாங்கலாக வந்த டிடியின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது.

-விளம்பரம்-

இதை அடுத்து தற்போது இவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் மஞ்சுவாரியர், பகத் பாஸில், அமிதாப் பச்சன், ராணா, ரித்திகா சிங் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து சமீபத்தில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று இருந்தது.

- Advertisement -

சிகிச்சைக்கு பின் டிடி:

இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களின் பட அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளனி திவ்யதர்ஷினி தான் தொகுத்து வழங்கியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு அழகாக நடனமாடி வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாவிலும் போட்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பின் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி.

டிடி வீடியோ:

கிட்டத்தட்ட இவர் 5 மணி நேரம் நிகழ்ச்சியை நின்று கொண்டே தொகுத்து வழங்கி இருந்தார். பின் நிகழ்ச்சி முடிந்து நடக்க முடியாமல் இரண்டு பேருடைய உதவியால் கை தாங்கலாக டிடியை பிடித்து சென்றிருந்தார்கள். இப்படி இவர் உடலுக்கு முடியாத நிலையிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு காரணம், ரஜினியின் தீவிர ரசிகை. அவர் மீது இருந்த அன்பின் மரியாதை காரணமாக டிடி இதை செய்தார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

டிடி குறித்த தகவல்:

தற்போது இவருடைய வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே அவருக்கு ஆறுதலாக கமெண்ட் போட்டும், அவருடைய உடல் நலத்தை விசாரித்தும் வருகிறார்கள். மேலும், பல ஆண்டு காலமாக ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு டிடி பேச்சு திறனாலும், சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர். இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் மீடியாவில் பயணித்து கொண்டு வருகிறார்.

டிடி உடல் ப்ரச்சனை:

இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.
இவர் தொகுப்பாளினியாக மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். இதற்கு இடையில் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இவரால் அதிக நேரம் நிற்க முடியாது. இதனால் இவர் பெரும்பாலும் சேரில் தான் அமர்ந்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாக சில ஆண்டுகளாகவே இவர் பெரிதாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. சில மாதங்களுக்கு முன் தான் இவரின் காலில் நான்காவது முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறி இருந்தார்.

Advertisement