டிடியின் முன்னாள் கணவரா இது ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

0
708
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பெண் தொகுப்பாளினி யார் ? என்று கேட்டால் சின்ன குழந்தைகூட சொல்லிடுங்க. அந்த அளவிற்கு மக்களிடையே அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினி மட்டும் இல்லைங்க அவங்க அக்கா பிரியதர்ஷினி கூட ஒரு பிரபலமான தொகுப்பாளினி ஆவார். மேலும், டிடியின் தம்பி ஒரு விமான ஓட்டி ஆகவும் உள்ளார். தற்போது இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியிலேயே படித்து முடித்துவிட்டு அங்கேயே பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லைங்க இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள். இவர் தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். இவரை பெரும்பாலும் டிடி என்றுதான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளர்கள் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான தொகுப்பாளர் ஆவார்.

- Advertisement -

இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர வைத்துள்ளது. அது மட்டும் இல்லைங்க ரசிகர்கள்தான் பிரபலமான நடிகர்கள் இடம் ஆட்டோகிராஃப் வாங்குவதும், செல்பி எடுப்பது போன்று செய்வார்கள். ஆனால், சினிமாவில் உள்ள ஒரு சில பிரபலங்கள் நம்ம டிடி இடம் ஆட்டோகிராப் வாங்கி, போட்டோ எடுத்து உள்ளார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.

டிடி திருமணம் :

மேலும் ,ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்ம திவ்யதர்ஷினி தான் இருப்பார் என்று பேசப்படும் அளவிற்கு அவ்வளவு நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளார். மேலும், ஒரு நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை போரடிக்காமல் கொண்டு செல்லும் மந்திரத்தை திவ்யதர்ஷினிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். திவ்யதர்ஷினி எப்பவுமே நகைச்சுவையான தன்னுடைய துள்ளலான பேசினால் அனைவரையும் தன் பக்கம் இழுத்தவர்.அந்த மாதிரி தாங்க தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனையும் ஈர்த்தார்.

-விளம்பரம்-

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை :

அது மட்டும் இல்லைங்க இவர் சில வருடங்களுக்கு முன்னால் அதாவது 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்யலாம் என விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்தார்கள் பின்னர் உறுதியாக விவாகரத்தும் வாங்கினார்கள்.

விவகாரத்துக்கான காரணம் :

இந்நிலையில் இவர்கள் விவாகரத்து வாங்கியது குறித்து டிடி கணவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளது, திருமணத்திற்கு பிறகும் டிடி லேட் நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு வீட்டிற்கு லேட்டாகத்தான் வருவார். இதை நான் பலமுறை கண்டித்தும் இருந்தேன். மேலும், டிவி நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடிக்க வேண்டாம் எனவும் கூறி இருந்தேன். ஆனால், அவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அதுமட்டுமில்லாமல் ஆண் நண்பர்களின் பழக்கவழக்கங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது. நான் இதெல்லாம் நம் குடும்பத்திற்கு ஏற்றது அன்று என்று பலமுறை கூறினேன். ஆனால், அவர் புரிந்து கொள்ளவே இல்லை. இதனால் தான் நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விவாகரத்து வாங்கிக் கொண்டோம் என மன வேதனையுடன் கூறினார். இப்படி ஒரு நிலையில் டிடியின் முன்னாள் கணவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement