சத்தமே இல்லாமல் தனது அடுத்தபடத்தின் அறிவிப்பை வெளியிட்ட அட்லீ.

0
50712
Atlee
- Advertisement -

சினிமாவில் லக் சிலருக்கு அடித்து கொண்டே இருக்கும். அவர்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் சினிமா போல் நடக்கும். அப்படி ஒரு மேஜிக் ஸ்டோரி தான் அட்லியுடையது. இயக்குநராக வேண்டும் என்ற தன் கனவிற்கு அச்சாரமாக, முதல் படமே மெகா பட்ஜெட் படம். ‘எந்திரன்’ படத்தில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் அட்லி. இதில் ஹீரோவாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ஷங்கர், ‘தளபதி’ விஜய்யை வைத்து இயக்கிய ‘நண்பன்’ படத்திலும் அட்லி பணிபுரிந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படத்தை இயக்கினார் அட்லி. அக்குறும்படம் செம லைக்ஸ் குவித்தது.’முகப்புத்தகம்’ குறும்படத்துக்கு பிறகு வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார் அட்லி. இயக்குநராக அறிமுகமான முதல் படமே பெரிய பட்ஜெட்டில் அமைந்தது.

- Advertisement -

அது தான் ‘ராஜா ராணி’ திரைப்படம். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.’ராஜா ராணி’க்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் ‘தெறி’ என்ற படத்துக்காக கூட்டணி அமைத்தார் அட்லி. ‘தெறி’ மாஸ் ஹிட்டாக அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். ஆம்.. அடுத்தடுத்து விஜய்யை வைத்து படங்கள் இயக்கும் வாய்ப்பு..

Image

‘தெறி’யை தொடர்ந்து ‘மெர்சல், பிகில்’ என தனக்கு மிகவும் பிடித்த ஒரு டாப் ஹீரோவை வைத்து, ஒரு ரசிகனாக அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கினார் அட்லி. அதுமட்டுமின்றி, முன்னணி இயக்குநர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தார் அட்லி.தற்போது, அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் புதிய படம் குறித்து ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அட்லி தனது ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கப்போகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை (ஏப்ரல் 12-ஆம் தேதி) மாலை 5 மணிக்கு ட்விட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம்.ஏற்கனவே, 2017-ஆம் ஆண்டு வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற ஹாரர் காமெடி ஜானர் படத்தை அட்லி தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜீவா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ஐக் இயக்கியிருந்தார். ‘பிகில்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கவுள்ளார். தற்போது, அதற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் அட்லி கவனம் செலுத்தி வருகிறாராம்.

Advertisement