வெளிநாட்டில் வீல் சேரல் சென்று சுற்றி பார்க்க காரணம் இதனால் தான் – அட கொடுமையே DDக்கு இப்படி ஒரு குறைபாடா ?

0
731
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
அதே போல இவர் travel பிரியர் என்பதால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார். இந்நிலையில் டிடி வீல்சேரில் இருந்த புகைப்படம், வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

டிடிக்கு வந்த சோதனை:

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் டிடி என்னாச்சு? உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேட்டு வந்தார்கள். அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் டி டி வீடியோ ஒன்றை போட்டுள்ளார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி டிடிக்கு காலில் பிராக்சர் ஆனது. அதிலிருந்து இவர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். அது மட்டுமில்லாமல் ரொம்ப நாளாகவே இவருக்கு முட்டியில் சில பிரச்சனைகள் இருக்கிறது. தற்போது இவர் துபாய்க்கு தன்னுடைய ஃபேமிலி உடன் புத்தாண்டை கொண்டாட சென்றிருக்கிறார்.

ரொமிடாய்ட்டு ஆத்ரட்டிஸ் பிரச்சனை:

அங்கு இவர் வீல் சேரில் உட்கார்ந்திருக்கும் மாதிரியான புகைப்படம், வீடியோ எல்லாம் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் டிடி வீல் சேரில் உட்கார்ந்து இருக்க அவருடைய தம்பி தள்ளிக் கொண்டு செல்கிறார். டிடிக்கு ரொமிடாய்ட்டு ஆத்ரட்டிஸ் இருப்பதினால் அவர்களால் ரொம்ப தூரம் நடக்க முடியாது. அதனால் தான் இவர் பல இடங்களுக்கு வீல்சேரில் சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

டிடி போட்ட டீவ்ட்:

பின் வாழ்க்கையை வாழாமல் தன்னைத் தானே கெடுத்து கொள்பவர்களுக்கு தான் இந்த பதிவும் வீடியோவும். போய் உங்களுடைய வாழ்க்கையை வாழுங்கள் என்று பதிவிட்டிருந்தார். அதேபோல் இவர் சமீபத்தில் சென்று இருந்த வெளிநாட்டில் கூட கையில் இரண்டு ஸ்டிக்குகளை வைத்து தான் நடந்து இருந்தார். மேலும், ரொமிடாய்ட்டு ஆத்ரட்டிஸ் என்பது நம்முடைய சொந்த மினி சிஸ்டமே தவறுதலாக நம்முடைய உள் உறுப்புக்கள் பாதிக்குமாம். பெரும்பாலும் கால்கள், கைகளில் இருக்கும் மூட்டு பகுதிகளில் அதிகமாக இது பாதிக்கும்.

இவர் நிகழ்ச்சிக்கு வராத காரணம்:

அதன் மூலமாகத்தான் டிடி பாதிக்கப்பட்டிருக்கிறார். வெகு தூரம் நடக்கனும் என்றால் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி தான் நடக்க முடியும். அதனால் தான் அவர் தூரமாக நடக்க வேண்டும் என்றால் வீல் சேரில் செல்வாராம். அது மட்டுமில்லாமல் ரொம்ப நேரம் நிற்க முடியாது என்ற காரணத்தினால் தான் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு பலரும் வருத்தத்தையும் தங்கள் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement