உங்களோட கடந்த கால வாழ்கை உங்களை இப்போ பாதிக்கிறதா – ரசிகரின் கேள்விக்கு டிடியின் பதில்.

0
1268
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

-விளம்பரம்-

திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

இதையும் பாருங்க : ஆறு பட காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மரணம் – செய்திகள் கூட வெளியாவதா அவலம்.

- Advertisement -

இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. அதே போல 36 வயதை கடந்த டிடி இன்னமும் சிங்கிளாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், உங்களின் கடந்த கால வாழ்க்கை உங்கள் நிகழ்கால வாழ்க்கையை பாதிக்கிறதா என்று கேள்வி கேட்டிருந்தார் அதற்கு பதில் அளித்த டிடி, கண்டிப்பாக கிடையாது. ஒரு முறை முடிந்துவிட்டால் அதை திரும்பி பார்க்கக் கூடாது. அதில் இருக்கும் படத்தை மட்டும் கற்றுக்கொண்டு அடுத்து வாழ்க்கையில் என்ன என்பதை பார்த்துக்கொண்டு போய்ட்டே இருக்கனும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

அதே போல ‘வாழ்க்கையில் இரண்டாம் காதல் பற்றி உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த டிடி, அது என்ன முதல் காதல் இரண்டாம் காதல், காதல் ஒரு தாட்டி தான் வருமா, ரெண்டு தாட்டி தான் வருமா ? அது எல்லாம் சினிமால காற்றது. காதல் உங்கள் வாழ்வின் பகுதி. வாழ்க்கைல ரெண்டு மூணு லவ் இருக்குனா அது தப்பில்ல, ஒரே நேரத்துல நாலு, அஞ்சு லவ் இருந்தால் தான் தப்பு என்று கூறியுள்ளார்.

Advertisement