ஆறு பட காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மரணம் – செய்திகள் கூட வெளியாவதா அவலம்.

0
1545
iyappan
- Advertisement -

ஆறு பட காமெடி நடிகர் காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு துயர் சமபாவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பல்வேறு பிரபலமான நடிகர்களின் மரணம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் காலமாகி இருந்தது தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து கே வி ஆனந்த், பாண்டு என்று பலர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-
மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. - TAMIL  MINT

இப்படி கொரோனாவால் பல்வேறு பிரபலங்கள் மரணத்து வரும் நிலையில் சமீப காலமாக பல்வேறு பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக காலமாகி வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லை சிவா காலமாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தமிழில் ஒரு சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் காலமாகி இருக்கிறார்.

இதையும் பாருங்க : 20 ஆண்டுக்கு முன் டிடிக்கு முதல் தொகுப்பாளினி வாய்ப்பு கொடுத்தது நபர் பகிர்ந்த டிடியின் அறிய புகைப்படம்.

- Advertisement -

தமிழில் ஒரு சில படங்களில் வடிவேலுவுடன் காமெடி வேடத்தில் நடித்தவர் நடிங்கர் ஐயப்பன் கோபி. இவர் தமிழில் ஆறு, காக்கி சட்டை, கருப்பன், சதுரங்க வேட்டை, என் ஆளோட செருப்பை காணோம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.காரைக்குடி அருகே உள்ள பள்ளத்துாரை சேர்ந்தவர் ஐயப்பன் கோபி. பாங்க் ஆப் மதுராவில் பணியாற்றிய இவர், நடிப்பு ஆசையால் அதை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். 

பாலசந்தர் ‘ஜாதிமல்லி’ படத்தில் இவரை அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து குணசித்திரம், நகைச்சுவை என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்தார். இந்த செய்தி இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. ஐயப்பன் கோபி மறைவை அடுத்து திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement