நீங்கள்தான் உண்மையான நண்பன்..! உங்களுக்கு சல்யூட்..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!

0
987
kerala-flood
- Advertisement -

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவசரக் கமிட்டி அமைத்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீஃபாவின் உதவியைக் `கேரள மக்கள் மறக்கமாட்டார்கள்’ என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு, நிலச்சரிவு என இயற்கை பேரிடரின் கோரப்பிடியில் கடவுளின் தேசமான கேரளம் சிக்கியுள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்குப் பருவமழையால் சந்தோஷமடையும் கேரள மக்கள் இந்த ஆண்டு பெய்துள்ள பருவமழையால் துயரத்தைச் சந்தித்துள்ளனர். வெள்ளம், நீரில் மிதக்கும் வீடுகள், படகுகளின் மூலம் மீட்கப்படும் மக்கள் என இதுதொடர்பான செய்திகள்தான் கடந்த இரண்டு வாரகாலமாக செய்திஊடகங்களையும், இணையங்களையும் சுற்றிவருகிறது. தற்போது வரைக்கும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கையோ 324-ஐ தொட்டிருக்கிறது. மழை நின்ற பிறகுதான் சேதப் பணிகளை முழுமையாகக் கணக்கெடுக்க முடியும்.

அப்போது முழுநிலவரமும் வெளிவரும். நிவாரணப் பணிகளை மாநில அரசும், மத்திய அரசும் முடுக்கிவிட்டுள்ளன. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என அனைவரும் களத்தில் நேரடியாக இறங்கியுள்ளனர். இயற்கையின் இந்தக் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுகள் போன்ற அடிப்படைப் பொருள்களை அனுப்பும் பணியில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், திரைப்படப் பிரபலங்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களுடன் தற்போது கேரள மக்கள் அதிகம் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரகமும் கைகோத்துள்ளது.

-விளம்பரம்-

flood kerala

அவர்களுக்கு உதவும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீஃபா உத்தரவில் அவசரக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேசிய அவசரக் குழு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கமிட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய உள்ளது என்றும் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் கேரளாவுக்கு உதவ வேண்டும் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர் ஹெச்ஹெச் சேக் முகமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், “கேரள மக்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் அவர்களுக்கும் பங்கு இருக்கிறது. அவர்களுக்கு இந்த நாள்களில் உதவ வேண்டும் என்ற பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டு அதை ஆங்கிலம், மலையாளம், அரபிக் என மூன்று மொழிகளிலும் ட்விட்டரில் பதிவிட்டார்.

அமீரக அதிபரின் மனித நேயத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “உங்களது அக்கறை, தாராள மனப்பான்மை மற்றும் பெரிய இதயத்துக்கு நன்றி. தேவைப்படும் நேரத்தில் அளித்துள்ள இந்த உதவியை கேரள மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் அளித்துள்ள உதவி கேரளாவின் உண்மையான நண்பன் நீங்கள் என்பதைக் காட்டுகிறது. இதற்காக என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு ஒரு சல்யூட்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement