பொன்னியின் செல்வன் நந்தினிக்கு டப்பிங் கொடுத்து இருப்பது இந்த நடிகையா – இவங்க வாய்ஸ் செமயா இருக்குமே.

0
656
AishwaryaRai
- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் பிரபல சீரியல் நடிகை தான் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவரின் நீண்ட நாள் கனவுப்படமே ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் கலை இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா:

மேலும், சில தினங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பலரும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள். இவர்களுடன் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் வெளியான ட்ரெய்லருக்கு கமலஹாசன் தான் பின்னனி குரல் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம்:

இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்தவர் கொடுத்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராயை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், படத்தில் நடிகை ஐஸ்வர்யாராய்க்கு டப்பிங் கொடுத்தவர் வேறு யாருமில்லை சீரியல் நடிகை, டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் தான்.

நடிகை தீபா வெங்கட்:

இதை அவரே தன்னுடைய instagram பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர், பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. முதல் முறையாக ஐஸ்வர்யாராய் குரல் கொடுத்திருக்கிறேன். இதற்கு மணிரத்தினம் சாருக்கு தான் என்னுடைய நன்றி சொல்லணும் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது

Advertisement