நீங்க வெளிய தீபக் அப்படி பண்ணத பாத்தீங்களா – அருணை வெளுத்து வாங்கிய தீபக்கின் மனைவி

0
166
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சத்யா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 79 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் கொடுத்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க்கில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார். இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

தீபக் மனைவி சொன்னது:

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீடாஸ்க் நடைபெறுகிறது, அதாவது போட்டியாளர்களுடைய உறவினர்கள் உள்ளே வருகிறார்கள். அந்த வகையில் முதலில் தீபக்கின் மனைவியும் அவருடைய மகன் வந்திருக்கிறார்கள். அப்போது நிகழ்ச்சியில் பிக் பாஸ், உங்களுக்கு இந்த வீட்டில் யாருடன் முரண்பாடு இருக்கிறது என்று தீபக் மனைவியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு தீபக் மனைவி சிவரஞ்சனி, எனக்கு இந்த வீட்டில் முரண்பாடு என்றால் அருண் தான். அவர் தீபக்கை பற்றி பேசின ஒரு விஷயம் மனைவியாக எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தீபக் மீது அவருக்கு நிறைய வருத்தங்கள் இருக்கிறது.

-விளம்பரம்-

அருண் சொன்ன வார்த்தை:

இந்த வீட்டிற்குள் அவர்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தினால் நடந்திருக்கும். நான் அதைப் பற்றி பேசவில்லை. ஆனால், தீபக்கை பற்றி உங்களுக்கு முழுவதுமாக எதுவும் தெரியாது. ஏதாவது ஒரு இன்சிடென்ட் வைத்து பேசினால் கூட பரவாயில்லை. ஆனால், முழுக்க முழுக்க ஒரு கற்பனையாக தீபக் இப்படிதான் என்று சொல்வதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அதுவும் நீங்கள் சத்யாவிடம், நான் பிரபலமான நடிகராக இருக்கும்போது என்னை இவர் இப்படி நடத்துகிறார். இவர் பிரபலமாக இருக்கும்போது ஒரு கார் டிரைவர் இடம் எல்லாம் எப்படி நடத்திருப்பார்? என்று பேசி இருக்கிறீர்கள். அதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.

தீபக் பற்றி சொன்னது:

தீபக் கோபப்படுவார், பேசுவார். ஆனால், யாரையும் அப்படி நடத்தியது கிடையாது. அவருடைய பர்சனல் லைப் தெரியாமல் பேச வேண்டாம். இது வெளியில் ரொம்ப தவறாக போகிறது. தீபக் பேச்சில் இருக்கக்கூடியவர்கள் தான் ரொம்ப க்ளோஸ் ஆக இருக்கிறார்கள். சஞ்சீவ், வெங்கட், தீபக் எல்லோருமே இன்னமும் அவருடைய நட்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர் வளர்ந்து விட்டார்கள் என்று அவர்களுக்குள்ளே பொறாமை பட்டதே கிடையாது. அந்த அளவிற்கு எல்லோரிடமும் உண்மையாக இருக்கிறார். அவரைப் பற்றி நீ தெரியாமல் சொன்ன ஒரு விஷயம் தான் தப்பு என்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement