நேர்கொண்ட பார்வை பட்டப்படிப்பில் அஜித் செய்த காரியத்தை அம்பலப்படுத்திய நடிகர் டெல்லி கணேஷ்!

0
315

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இருக்கும் ரசிகர்கள் பலம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அது போல இவரை பற்றி பல்வேறு நடிகர் நடிகைகளும் பல தகவல்களை கூறியுள்ளனர். இந்த வகையில் அஜித்தை பற்றி பிரபல நடிகர் டெல்லி கணேஷ் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

தற்போது நடிகர் அஜித், வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் டெல்லி கணேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித்துடன் பகைவன், தொடரும், ஜனா போன்ற மூன்று படங்களில் அஜித்துடன் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ளார் நடிகர் டெல்லி கணேஷ்.

இதையும் படியுங்க: முக்கியதுவம் இல்லை என்றாலும் ‘தல59’-ல் ஒப்புக்கொண்ட காரணம் அஜித் தான்.! பிரபல நடிகர் பேட்டி.! 

சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் டெல்லி கணேஷ், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் அஜித்தை நான் ஒரு கோர்ட் சீனில் தான் பார்த்தேன். அப்போது என்னை கண்டதும், சார் என்று கூறி என்னை கட்டித் தழுவிக் கொண்டார்’ என்று கூறியுள்ளார் டெல்லிகணேஷ். இந்த வீடியோ தற்போது சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது