தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களின் நிலைமை குறித்து டெல்லி கணேஷ் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் டெல்லி கணேஷ். இவர் திருநெல்வேலி சேர்ந்தவர். இவர் பழம்பெரும் நடிகர் ஆவார். இவரை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர்.

இவர் 1977 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் குணச்சித்திர வேடங்களில் தான் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement

சின்னத்திரையில் டெல்லி கணேஷ்:

அதற்குப்பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். மேலும், இவர் சன் டிவி, விஜய் டிவி என பல சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் குறும்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனின் குறும்படத்தில் இவர் நடித்திருந்தார். டெல்லி கணேஷ் நடித்த கதாபாத்திரத்தை தான் லவ் டுடே படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.

டெல்லி கணேஷ் திரைப்பயணம்:

கடந்த ஆண்டுதான் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் வெளியாகியிருந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்த படம் குறித்து கூட டெல்லி கணேஷ் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், குறும்படத்தில் வாய்ப்பு தருகிறார்கள். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தர மறுக்கிறார்கள் என்று வருத்தமாக பேசி இருந்தார். இப்படி இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் சினிமாவில் கிடைக்கவே இல்லை.

Advertisement

டெல்லி கணேஷ் கூறியது:

தற்போது இவர் வாய்ப்பு இல்லாமல் தான் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருந்தது. இதை கே.எஸ் ரவிக்குமார் அளித்திருந்தார். அப்போது மேடையில் டெல்லி கணேஷ் கூறியிருந்தது, இந்த விருது நான் நடித்த படங்களை விட அதிமடங்கு சந்தோசமாக இருக்கிறது. காரணம், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு என்றும் விருது கொடுக்க மாட்டார்கள்.

Advertisement

தமிழ் சினிமாவின் நிலைமை:

நான் மட்டுமில்லாமல் என்னை போல் நிறைய குணச்சித்திர நடிகர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதை பற்றி என்ன நினைத்துக் கொண்டாலும் எனக்கு கவலை இல்லை. குணச்சித்திர வேடங்களில் நடிப்பவர்களுக்கு விருதும் அங்கீகாரமும் கிடைக்காதது நினைத்து கஷ்டமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஏன் இந்த நிலைமை என்று தான் தெரியவில்லை என்று பேசி இருந்தார்.

Advertisement