விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.மேலும், நீண்டஇடைவேளிக்கு பின்னர் காமெடி நடிகர் விவேக் விஜயுடன் நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த 28 ஆம் தேதி இந்த படத்தின் பூஜை துவங்கியது.
மேலும், இந்த படத்தின் முதல் கட்ட பணிகளுக்கான சென்னையில் உள்ள பிரபல பின்னி மில்லில் தான் செட் அமைக்கபட உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க நடிகர் டேனியல் பாலாஜியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே விஜய் நடித்த பைரவா படத்திலும் வில்லன் நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த தகவல் பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. சமீபத்தில் வெளியான வடசென்னை படத்திலும் நடிகர் டேனியிலின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.