தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விமல் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தேசிங்கு ராஜா 2. தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகத்தில் விமல்- சூரி இருவருமே இணைந்து நடித்திருந்தார்கள். இதை எடுத்து தற்போது இரண்டாம் பாகத்தில் விமல் நடித்திருக்கிறார். இது முற்றிலும் வேறுபட்ட கதை. இந்த படத்தை இயக்குனர் எழில் தான் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் புதுமுகம் ஜனநாதன், நடிகை பூஜிதா, புகழ், ரவி மரியா, சிங்கம் புலி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ விமல் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இன்னொரு ஏரியாவில் குக் வித் கோமாளி புகழ் போலீஸ் அதிகாரியாக ஆக இருக்கிறார். ஆனால், இவர் பெண் வேடத்தில் இருக்கிறார். ரெண்டு பேருமே வேறு வேறு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குமே எப்போதும் செட்டாகாது. ஏதோ ஒரு பிரச்சனையில் இருவருமே மோதிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது மார்க்கெட் ராஜாவை கொள்கின்றனர்.
அவருடைய தலையை வேறொடு இடத்தில் வைக்க, அது பல இடங்களுக்கு செல்கிறது. இன்னொரு பக்கம் மினிஸ்டர் மகனை கொலை செய்தே தீருவேன் என்று சத்யா சுற்றி கொண்டிருக்கிறார். இதனால் மினிஸ்டர் போலீஸிடம் உதவி கேட்கிறார். பின் புகழ்- விமல் இருவருமே மினிஸ்டர் மகனை காப்பாற்ற நினைக்கிறார்கள். இதனால் புகழ்-விமல் இருவருமே மோதி கொள்கிறார்கள். ஒருவழியாக விமல் அந்த பொறுப்பை கையில் எடுக்கிறார். ஆனால், சத்யா மினிஸ்டர் மகனை கொன்று விடுகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? விமல் -புகழ் இருவரும் சேர்ந்தார்களா? மினிஸ்டர் மகனை கொன்றது யார்? எதற்காக கொள்கிறார்கள்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் எழில் இந்தப் படத்தை இவ்வளவு மோசமாக எடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. காமெடி என்ற பெயரில் சுத்தி சுத்தி கதறவிட்டிருக்கிறார் இயக்குனர். படத்தில் ஹீரோ விமல் முதல் பாகத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். ஆனால், இரண்டாம் பாகத்தில் எதற்குடா நடித்த என்று யோசிக்கும் அளவிற்கு கதற விட்டிருக்கிறார்.
பின் புகழ் படத்தில் லேடி கெட் அப் தான். இருந்தாலுமே சில இடங்களில் அவருடைய வாய்ஸ் ஆக்டிங் எல்லாமே எரிச்சலை தான் ஏற்படுத்தி இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே ஏதோ படத்திற்காக வந்து சென்று இருக்கிறார்கள். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை. காமெடி நடிகர்கள் நிறைய இருந்தாலும் சிரிப்புதான் வரவில்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை ஓரளவு ஓகே. ஆனால், கதையில் தான் இயக்குனர் கோட்டை விட்டிருக்கிறார். மொத்தத்தில் ரொம்ப ரொம்ப சுமாரான படம் தான் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் ஓகே
பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே
இரண்டாம் பாதி சுமார்

குறை:
கதைக்களம் சொதப்பல்
கதைக்களத்தை கொண்டு சென்ற இடத்தில் இயக்குனர் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம்
காமெடி ஒன்றும் இல்லை
முதல் பாதி கடுப்பு
மொத்தத்தில் தேசிங்கு ராஜா 2- ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்






