மீண்டும் உருவாகும் முத்தையா முரளிதரனின் பயோபிக் திரைப்படம். இந்த படத்தில் நடிக்கப்போகும் நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் உருவாகி வருகிறது. அதில் சாதித்த சினிமா பிரபலங்கள், சாதனையாளர்கள், கிரிக்கெட் வீரர் என பல பேரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.
இந்த படத்தை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்குகிறார். பெரும் பொருட் செலவில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தை தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மேலும், இந்த படம் உருவாவது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாகவே நடைபெற்று வந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாகவும், பல்வேறு சர்ச்சைகள் காரணமாகவும் இந்த படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது. இந்த படத்திற்கு ‘800’ என்று தலைப்பு வைக்கப்பட்டது.
800 படத்தில் முதலில் விஜய் சேதுபதி:
இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அதற்கான போஸ்டரும் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் நடிகர் விஜய் சேதுபதி அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே காணப்பட்டார். ஆனால், இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழர் என்றாலும் அவர் சிங்களர்களின் பக்கமே நிற்கக் கூடியவர்.
எதிர்ப்பு தெரிவித்த தமிழ் மக்கள்:
எனவே அவரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும், முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதராவானவர் எனக்கூறி பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அதோடு இதுதொடர்பாக விஜய் சேதுபதிக்கு பல பிரபலங்கள் வேண்டுகோள் வைத்திருந்தார்கள். இயக்குனர் சேரன் முதல் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களை எடுத்த இயக்குனர் சீனு ராமசாமி என்று பல பேர் இந்த படத்தில் நடிக்க வேண்டாம், தமிழ் மக்களின் உணர்வை விட அவர்களுடைய பாசத்தை விட உங்களுக்கு இந்த படம் பெருசில்ல. உங்களின் வெற்றிக்கு 1000 கதாபத்திரம் காத்திருக்கிறது என்றெல்லாம் டீவ்ட் போட்டிருந்தார்கள்.
முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்:
இப்படி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சைகள் காரணமாக படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதாக அறிவித்து இருந்தார். அதற்கு பிறகு இந்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க போகும் நடிகர் குறித்த தகவல் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க, நடிகர் தேவ் படேல் தான் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஊழலற்ற.
தேவ் படேல் நடித்த படங்கள்:
இவர் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தேவ் படேல் பிரிட்டனை சேர்ந்தவர். இவர் தற்போது மங்கி மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர் ஹோட்டல் மும்பை(Hotel Mumbai), தி வெட்டிங் கெஸ்ட்(The Wedding Guest), தி கிரீன் நைட்(The Green Night) போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.