96 படத்தில் வந்த பொண்ணா இது ? மகளின் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்த தேவதர்ஷினி

0
3614
Devadharshini
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பரிட்சியமான குணச்சித்திர நடிகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம், அந்த வகையில் தமிழ் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பின்னர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை தேவதர்ஷினி.சன் டிவியில் ஒளிபரப்பான “மர்ம தேசம்” என்ற தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை தேவதர்ஷினி. அதன் பின்னர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த இவர் “பார்த்திபன் கனவு” படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும், குணசித்ர வேடத்திலும் அசத்தியுள்ளார் நடிகை தேவதர்ஷினி. கடந்த 2002 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் சேட்டன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை தேவதர்ஷினி. அவரும் மக்களுக்கு பரிட்சியமான ஒரு முகம் தான். மேலும், இவர்கள் இருவருக்கும் 14 வயதில் நியாத்தி கடாம்பி என்ற மகளும் இருக்கிறார். இவர் 96 படத்தில் குட்டி ஜானு தோழியாக நடித்து இருந்தார்.

- Advertisement -

பிகில் பட அனுபவம் :

மேலும்,தேவதர்ஷினி அவர்கள் பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவதர்ஷினி பேசுகையில், மெர்சல் படத்தில் நான் நடித்து இருந்தேன். ஆனால், என்ன ? காரணம் என்று தெரியவில்லை, எடிட்டிங் செய்யும் போது நான் நடித்த காட்சிகளை நீக்கி விட்டார்கள். ஆனால், இந்த முறை அப்படி நடக்காது என்று இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் கூறியிருந்தார். மேலும்,விஜய் அவர்கள் என் மீது இவ்வளவு அக்கறை வைத்து கேட்டது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.

விஜயுடன் போட்டோ எடுக்கவில்லை :

அதோடு அவர் உரிமையாக என்னை “அக்கா” என்று கூப்பிட்டது எனக்கு வானத்தில் பறந்தது போல இருந்தது. மேலும், என்னுடைய மகள் நியதி விஜய் அவர்களின் ரொம்ப பெரிய ரசிகை. நானும் தான் அவரோட ரசிகை. முதல் நாள் பிகில் பட சூட்டிங்கில் நம்ம தளபதி விஜயுடன் எப்படியாவது போட்டோ எடுக்க வேண்டும்ன்னு என் மகள் நியதி ஷூட்டிங்க்கு என்னுடன் வந்து இருந்தால். ஆனால், ஷூட்டிங் நேரத்தில் விஜய் அவர்கள் ரொம்ப பிஸியாக இருந்ததால் அவருடன் போட்டோ எடுக்கவில்லை.

-விளம்பரம்-

பிகில் பட வாய்ப்பை இழந்த மகள் :

நானும், சரின்னு சொல்லிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டேன். திடீரென்று விஜய் அவர்கள் என் முன்னால் வந்து நின்று, நீங்கள் நடித்த ” 96″ படத்தை பார்த்தேன். உங்களை விட உங்கள் மகள் நடிப்பு சூப்பராக இருந்தது என்று கூறினார். இதை கேட்டவுடன் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு பத்து நிமிடம் நியதியும் ,விஜய் அவர்களும் பேசி இருப்பார்கள். என் மகளுக்கு பிகில் படத்தின் புட்பால் டீம் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தேவதர்ஷினி மகளின் லேட்டஸ்ட் போட்டோஷூட் :

ஆனால், பத்தாவது பரீட்சை இருந்ததால் அவளால் நடிக்க முடியல. அதோடு இந்த படத்தில் என் மகள் நடிக்க முடியாதது ரொம்ப வருத்தமாக இருந்தது என்று கூறி இருந்தார்.96 படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தன் மகளின் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் தேவதர்ஷினி. அதில் அவரின் மகள் ஹீரோயின் ரேஞ்சுக்கு அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார்.

Advertisement