கோலங்கள் ஆதியை ஞாகபம் இருக்கா ? தேவயாணி பகிர்ந்த புகைப்படங்கள். ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
2804
- Advertisement -

கோலங்கள் சீரியல் ஆதி குறித்து நடிகை தேவயானி பகிர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் இயக்கும் சீரியல் எல்லாம் பெண்களின் வாழ்வை மையமாக கொண்ட கதையாக அமைந்திருக்கும். மேலும், திருச்செல்வம் இயக்கிய தொடர்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்று தான் கோலங்கள்.

-விளம்பரம்-

இந்த தொடர் 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மொத்தம் இந்த தொடர் 1533 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த தொடரில் கதாநாயகியாக தேவயானி நடித்திருந்தார். ஆனால், முதலில் இந்த தொடரின் கதாநாயகியாக தேவயானி வேடத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா தான் நடிக்க இருப்பதாக இருந்தது. சௌந்தர்யா அவரால் நடிக்க முடியாமல் போனதனால் தான் தேவயானி நடித்தாராம். இந்த சீரியல் தான் நடிகை தேவயானிக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

- Advertisement -

கோலங்கள் சீரியல்:

அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலை மீண்டும் ஒளிபரப்ப மாட்டார்களா? இந்த சீரியலின் இரண்டாவது பாகம் வராதா? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், இந்த சீரியலின் வெற்றிக்கு தேவையானி எவ்ளவோ முக்கியமோ, அந்த அளவிற்கு இந்த சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஆதியும் ஒரு காரணம். தற்போது இணையத்தில் கோலங்கள் சீரியலில் வில்லனாக மிரட்டி இருந்த ஆதியை பற்றி தேடியிருக்கிறார்கள். அவர் என்ன ஆனார் என்று பலருக்குமே தெரியவில்லை.

கோலங்கள் ஆதி:

மேலும், கோலங்கள் சீரியலில் ஆதியாக நடித்தவர் அஜய் கபூர். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மீடியாவிற்குள் நுழைவதற்காக பல போராட்டங்களை சந்தித்தார். அது மட்டும் இல்லாமல் வாய்ப்பு தேடி சென்றிருக்கும் போது இவர் தினமும் வாக்கிங் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படி வாக்கிங் செல்லும் போது தான் நடிகை சத்யா ப்ரியாவுடைய அறிமுகம் இவருக்கு கிடைத்திருக்கிறது. அதற்கு பிறகு தான் இவர் கோலங்கள் சீரியலில் வாய்ப்பு கேட்டு சென்றார். அப்போது இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் நான் ஏற்கனவே ஆதி கதாபாத்திரத்தில் நடிகர் ஒருவரை ஃபிக்ஸ் பண்ணிவிட்டேன் என்று சொன்னார்.

-விளம்பரம்-

அஜய் குறித்த தகவல்:

இருந்தாலும், இவர் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நான் நடித்துக் காட்டுகிறேன் என்று அடம் பிடித்திருக்கிறார். இயக்குனரும் சரி என்று சொன்னவுடன் ஒரே சாட்டில் அஜய் நடித்துக் காட்டியிருக்கிறார். உடனே திருச்செல்வத்திற்கு பிடித்து போய்விட்டது. எப்படியோ போராடி அஜய் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கினார். கோலங்கள் சீரியல் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. அதற்கு பின் இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். வெள்ளித்திரையில் கூட இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

தேவையானி போஸ்ட்:

கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி தொடரில் நடித்து இருந்தார். தற்போது இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இவர் என்ன ஆனார் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் தேவையானி அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கோலங்கள் சீரியலின் மலரும் நினைவுகள் குறித்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் ஆதியும் இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் , ஹாய்! நம்ம ஆதி இருக்காரு, ஆதி என்ன பண்றீங்க? என்று அவரைக் குறித்து பலருமே சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement