நட்பிற்காக நான் வாங்கிய சம்பளமும் கம்மி தான் – ஆனால், யாரோ ஒரு XY காக-தேவதையை கண்டேன் ஸ்ரீ.

0
73798
Sree-Kumar
- Advertisement -

சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகர்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகி வரும் பல்வேறு சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் ஸ்ரீ எனப்படும் ஸ்ரீ குமார். இவர் பிரபல இசை அமைப்பாளராக ஷங்கர் கணேஷின் மகன் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. மேலும், ஸ்ரீயும் தனது தந்தை பெயரை பயன்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் தற்போது அனைவரும் அறியக்கூடிய ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
Related image

சீரியல் நடிகரான இவர் “சரோஜா,தெறி, ரங்கூன், ” போன்ற பல தமிழ் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஸ்ரீகுமார், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “தேவதையை கண்டேன், தலையணை பூக்கள்” போன்ற தொடர்களில் நடித்து வந்தார். இதில் தேவதையை கண்டேன் என்ற தொடரில் வாசுதேவன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென்று இந்த தொடரில் இருந்து விலகுவதாக நடிகர் ஸ்ரீ அறிவித்திருந்தார். இதற்கான காரணத்தை தெரிவித்தியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீயிடன், இந்த சீரியலில் இருந்து விலகியது ஏன் என்ற கேள்வி கேட்டு கேட்டபோது, அதற்கு முக்கிய காரணமே கதையில் ஏற்பட்ட மாற்றம்தான். அந்த சீரியலில் கம்மி சம்பளத்திற்கு நடிக்க நான் ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணமே அது ஒரு தெலுங்கு சீரியலில் ரீமேக் என்பதற்காகத்தான். தெலுங்கில் அந்த சீரியல் ஒரு நல்ல கதையை கொண்டிருக்கிறது. அந்த சீரியலில் நான் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் எல்லாரும் போன் செய்து அந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததை நினைத்து பொறாமைபட்டார்கள். ஆனால் அவர்கள் யாரோ ஒரு எக்ஸ் ஒய் இதற்காக கதையை மாத்துகிறேன் என்று கதையில் கவனம் செலுத்தாமல் தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்று சேர்த்து விட்டார்கள்.

வீடியோவில் 14:15 நிமிடங்களில் பார்க்கவும்

-விளம்பரம்-

இன்னொருவரின் கதாபாத்திரத்திற்காக என்னுடைய கதாபாத்திரத்தை மாற்றியது எனக்கு சரிப்பட்டு வரவில்லை இருப்பினும். சேனல் மீது நான் வைத்திருந்த மரியாதைக்காக நான் நடித்து வந்தேன். ஆனால், அதற்கு ஏற்றார்போல யாரடி நீ மோகினி தொடருக்கும் தேவதையை கண்டேன் தொடர்புக்கும் என்னுடைய டேட் இடித்தது. மேலும், யாரடி நீ மோகினி குழுவினர் தேவதையை கண்டேன் குழுவிடம் டேட் கேட்டபோது அவர்கள் சம்மதிக்கவில்லை. பின்னர் சேனலே என்னை அழைத்து தேவதையை கண்டேன் தொடரிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டார்கள் என்று கூறிவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ஸ்ரீ.

Advertisement