மற்ற நடிகைகள் டான்ஸ், பாட்டுன்னு இருக்க. தனிமைபடுத்தப்பட்ட நேரத்தில் மகள்களுடன் சேர்நது தற்காப்பு கலையை கற்றுவரும் தேவையானி.

0
15624
devaiyani
- Advertisement -

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸினால் சோகத்தில் உள்ளது. உலகம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால் ஆயிரக்கணக்கானோர் பழியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 1121 பேர் பாதிக்கப்படும்,28 உயிர் இழந்தும் உள்ளார்கள். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-
 தேவயானி

- Advertisement -

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், முன்னெச்சரிக்கைகள் உடன் இருக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருப்பதால் தவித்து வருகின்றனர். வீட்டில் இருப்பதால் போர் அடிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரும் தங்களுக்கு பிடித்த செயல்களை செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : விஜய் மகள் திவ்யாவா இது. வெளியான அன்சீன் புகைப்படம். இணையத்தில் செம வைரல்.

அந்த வகையில் நடிகை தேவயானி அவர்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே தன் பிள்ளைகளுக்கு சிலம்பம் கற்று தருகிறார். 90ஸ் காலகட்டத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது வரை நடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் இவர் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
கொரோனா கொடுத்த பொன்னான நேரம் ...

மேலும், நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். தேவயானியும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவர்கள் இரண்டு பேரும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை தேவையானி அவர்கள் சந்தியபாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் அரசின் விதிமுறைகளை மதித்து அவர் தனது மகள்களுடன் இருக்கிறார். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக இவர் தன் மகளுடன் சேர்ந்து சிலம்பம் கற்று வருகிறார்.

சிலம்பம் கற்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மற்ற நடிகைகள் உடற்பயிற்சி, நடனம், பாடல்கள், டிக்டாக் என்று பல வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை தேவயானி அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய கலையான தற்காப்பு கலையை பெண் குழந்தைகளுக்கு கற்க அனுப்பி வைத்துள்ளார்.

இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. தமிழில் இருக்கும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் தேவயானி நடித்து உள்ளார். தற்போது நடிகை தேவயானி அவர்கள் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

Advertisement