அந்த நபரின் உண்மை கதை தான் மாஸ்டர் – மாஸ்டர் படத்தின் உதவி எழுத்தாளர் சொன்ன செம தகவல். வீடியோ இதோ.

0
1181
master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதமே படம் ரிலீஸ் ஆக வேண்டியது.

-விளம்பரம்-

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பணிகள், ரிலீஸ் தேதி எல்லாம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா லாக்டவுனால் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

- Advertisement -

தற்போது அரசு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். மேலும், மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் துவங்கபட்டது. இந்த நிலையில் மாஸ்டர் கதையை எழுதும் பணிகளில் லோகேஷுக்கு உதவிய இருந்த எழுத்தாளர் பொன் பார்த்திபன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் மாஸ்டர் படத்தின் கதை உண்மையிலே நடந்த ஒரு நபரின் கதை.

அந்த நபரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை பார்த்து தான் லோகேஷுக்கு மாஸ்டர் படம் எடுக்க தோன்றியது என கூறி உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் மாஸ்டர் படம் ட்ரைலர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement