‘சைக்கிள் ஓட்டவும், செல்பி எடுக்கவும் தான் டைம் இருக்கு’ – அண்ணாமலை கருத்துக்கு DGP கொடுத்த மறைமுக பதிலடி (டெலீட் செய்யப்பட்ட பதிவு)

0
754
annamalai
- Advertisement -

பாஜக மாநில தலைவர் செய்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த டிஜிபி சைலேந்திரபாபு பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் துடிப்பான ஐபிஎஸ் அதிகாரியாக திகழ்பவர் சைலேந்திரபாபு. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடைய உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் 25 வயதிலேயே காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். மேலும், இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஏ எஸ் பி ஆக தன்னுடைய பணியைத் தொடங்கினார்.

-விளம்பரம்-

சூப்பர் Fit சைலேந்திரபாபு :

பின் இவர் சேலம், தர்மபுரி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சிறப்பு அதிரடிப்படை தலைவர், காவல்துறை ஆணையர், கடலோர காவல்படை, ஏடிஜிபி, ரயில்வே டிஜிபி என பல்வேறு பதவிகளை வகித்து இருக்கிறார். மேலும், தமிழகத்தின் 30வது டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்றுள்ளார். இவர் உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

- Advertisement -

Dgpயின் ஊக்கமூட்டும் பதிவுகள் :

இதனால் இவர் உடல் நல தகுதி எனும் தமிழ் நூலை எழுதி உடல் கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களுக்கு பரிசாக தந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வீரதீர விளையாட்டுகளான நீச்சல், தடகளம், துப்பாக்கி சுடுதல், சைக்கிளிங் போன்றவற்றில் சைலேந்திரபாபு அதிக ஈடுபாடு கொண்டவர். அந்த வகையில் இவர் தினசரி சைக்கிளிங் செல்வார். மேலும், ஆரோக்கியமான உணவுகள், எளிய உடற்பயிற்சி உள்ளிட்டவை பற்றி இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டு வருவார்.

அண்ணாமலை கண்டனம் :

இதனால் இவருக்கு சோசியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது அவர் கூறியது, தமிழக போலீசார் டிஜிபி சைலேந்திரபாபு கட்டுப்பாட்டில் இல்லை. தமிழகத்தின் காவல்துறை திமுக மாவட்ட செயலாளர்கள் கைகளில் தான் இருக்கிறது. நேர்மையான டிஜிபியாக இருந்தால் எதற்காக பாரபட்சமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விளம்பரம்-

சைலேந்திரபாபுவை விமர்சித்த அண்ணாமலை :

தமிழக காவல்துறை அவர் கையிலிருந்து நழுவி விட்டது. டிஜிபி பொருத்தவரை சைக்கிளிங் போறது, போட்டோ எடுக்கிறது, செல்பி எடுக்கிறது என்று ஹாப்பியா இருக்கிறார் என விமர்சனம் செய்திருக்கிறார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு இதுகுறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு போட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தார். பின் அவர் கூறி இருப்பது, போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.

சைலேந்திரபாபு பதிலடி :

நல்ல பழக்கங்களை கைவிட இயலாது. நல்லதை செய்வோம் நல்லதே சொல்வோம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பயங்கரமாக வரவேற்கப்பட்டு வந்தது. பின் சைலேந்திரபாபு அந்த தலைப்பை மாற்றி ”ஹெல்மட் அணிவோம், விபத்தைத் தடுப்போம் என்று பதிவிட்டுள்ளார். ஏன் இப்படி மாற்றினார் என்று தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய கருத்தை அரசியல் ரீதியான பதிலடியாக அமைந்துவிடுமோ? தேவையில்லாத சர்ச்சைக்குள் சிக்கி பிரச்சனை ஆகி விடுமோ? என்று மாற்றி விட்டாரே? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு சைலேந்திரபாபு தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement