சினிமாவில் இருக்கும் பெரும்பான்மையான நடிகைகளும், நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் கணக்கை வைத்துள்ளனர்.அதிலும் தற்போது மிகவும் பிரபலமானது என்றால் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தான்.
அதிலும் பெரும்பாலும் பிரபலங்கள் அனைவரும் ட்விட்டர் பக்கத்தில் தான் அதிகம் தங்களது அப்டேட்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்களை பல லட்ச கணக்காண ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ட்விட்டரில் அதிகம் பின் தொடரப்பட்டுள்ள தென்னிந்திய நடிகர் என்ற என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் தனுஷ். இவரை ட்விட்டரில் 8 மில்லியன் நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை கூட 5.12மில்லியன் நபர்கள் தான் பின்தொடர்ந்துள்ளனர். மேலும், கமலை 5.37 நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். விஜய் மற்றும் அஜித்திற்கு ட்விட்டர் பக்கத்தில் கணக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.